மத்திய பிரதேசம் பங்கு சந்தை

மத்திய பிரதேசப் பங்குச் சந்தை (Madhya Pradesh Stock Exchange) [1] இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்தூரில் அமைந்திருக்கிறது. மத்தியப் பிரதேசத்தின் பழமையான பங்குச் சந்தையும் இந்தியாவின் முன்னணிப் பங்குச் சந்தையாகவும் இது கருதப்படுகிறது. 1919 ஆம் ஆண்டு நிறுவப்பட்டு செபி எனப்படும் இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட இப்பங்கு சந்தை 2015 வரை நிரந்திர பங்குச் சந்தையாக செயல்பட்டது.

வரலாறு

தொகு

1919-இல் சுமார் 150 தரகர்களை கொண்ட சங்கமாகவேதான் ஆரம்பத்தில் இப்பங்கு சந்தை அமைக்கப்பட்டது. பின்பு பத்திரங்கள் ஒப்பந்த (கட்டுப்பாடு) சட்டம், 1956–ன் படி இந்திய அரசாங்கம் 1988-இல் இதற்கு நிரந்திர அங்கீகாரம் வழங்கியது. தற்போது மத்திய பிரதேசப் பங்குச் சந்தை 185 தரகர்களை உறுப்பினர்களாகக் கொண்டுள்ளது, இதில் சில முன்னணி தரகு நிறுவனங்களும் உள்ளடங்கியுள்ளன. மத்தியப் பிரதேசப் பங்குச் சந்தை பட்டியலில் முன்னணி பெருநிறுவனங்கள் உட்பட சுமார் 315 நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

2012 இல் தேசிய பங்குச் சந்தை மற்றும் 2013 இல் மும்பை பங்குச் சந்தை ஆகியவற்றுடன் கைகோர்த்தப் பின், இந்தியாவிலேயே மத்தியப் பிரதேச பங்குச் சந்தை தான் தனது உறுப்பினர்களுக்கு தற்சார்பான வர்த்தக மேடையை அமைத்துக் கொடுத்த ஒரே பிராந்திய பங்கு சந்தை என்ற சிறப்பை அடைந்தது.[2] மத்தியப் பிரதேச பங்குச் சந்தை தான் இந்தியாவிலயே முதன் முதலாக இரண்டு பங்கு சந்தைகளுடன் ஒப்பந்தத்தில் இணைந்த பிராந்திய பங்கு சந்தையாகும். மேலும், பிராந்திய சந்தைகள் தங்கள் செயலற்ற நிலையிலிருந்து கிளை ஆட்சி மூலமாக வெளிவரலாம் என செபி அனுமதி தந்த போது இந்தியாவில் மத்தியப் பிரதேசப் பங்குச் சந்தைதான் செபியிடம் முதலில் ஒப்புதல் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

நிகர சொத்து மதிப்பு 100 கோடியுடன் மத்தியப் பிரதேச பங்கு சந்தை தன்னுடைய சுய வர்த்தக பாதையை உருவாக்கிக் கொள்ளுமாறு 2014 ஆம் ஆண்டு செபி கேட்டுக்கொண்டது. தவறினால் அங்கீகாரம் இரத்து செய்யப்படும் எனவும் அவ்வமைப்பு தெரிவித்தது [3]. இதன்படி செபி 2015 இல் அங்கீகார இரத்து நடவடிக்கையை மேற்கொண்டது.

காலவரிசை

தொகு

மத்தியப் பிரதேச பங்குசந்தையின் வரலாறு [4] பின்வருமாறு:

1919 - தனிமனித சங்கமாகத் தொடக்கம்.

1957 - பிராந்திய பங்கு சந்தையாக அங்கீகரிக்கப்பட்டது.

1988 - நிதி அமைச்சக நிரந்திர அங்கீகாரம்.

1992 - மத்தியப் பிரதேசப் பங்குச் சந்தை அதிக வருவாயை பதிவு செய்தது.

2006 – ஒரு கூட்டு நிறுவனமாக வரையறுக்கப்பட்டது.

ஆகத்து 2007 – மத்திய பிரதேசப் பங்குச் சந்தை ஒரு பங்கின் மதிப்பை ரூபாய் 30/- க்கு கூட்டு பங்காக மாற்றியது.

2008 – முக்கிய முதலீட்டாளர்கள் 51% பங்குககளை கைப்பற்றினர்.

2009 – இரண்டு வர்த்தக உரிமையை சாதனை விலையாக ரூ.3.81 மற்றும் ரூ. 3.51 லட்சத்திற்கு ஏலம்.

10 ஏப்ரல் 2010 – பிரிவு 13-ன் படி தேசிய பங்குச் சந்தையுடன் ஒப்பந்தம்.

31 மார்ச் 2011 - இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்திடம்(செபி), தேசிய பங்குச் சந்தை ஒப்பந்தத்திற்கு ஒப்புதல்.

1 மே 2012 - பிரிவு 13-ன் படி மும்பை பங்குச் சந்தையுடன் ஒப்பந்தம்.

9 சூன் 2015- செபியின் வெளியேற்ற ஆணை.

மேற்கோள்கள்

தொகு
  1. https://en.wikipedia.org/wiki/Madhya_Pradesh_Stock_Exchange
  2. "MPSE - joining hands with NSE & BSE". http://business-standard.com. பார்க்கப்பட்ட நாள் 2012-11-05. {{cite web}}: External link in |publisher= (help)
  3. Madhya Pradesh stock exchange faces closure
  4. "MPSE - Timeline". mpseindia.in. பார்க்கப்பட்ட நாள் 2012-11-05.