மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம்

மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (Central Board of Indirect Taxes & Customs (CBIC) இந்திய அரசின் நிதி அமைச்சகத்தின் வருவாய்த் துறையின்கீழ் செயல்படும் இரண்டு வரி வாரியங்களில் ஒன்றாகும். மற்றொன்று மத்திய நேரடி வரிகள் வாரியம் ஆகும். மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தின்கீழ் செயல்படும் மத்திய சுங்கம் மற்றும் கலால் துறையானது மத்திய சரக்கு மற்றும் சேவை வரி, மத்திய கலால் வரி, சுங்க வரி மற்றும் பன்னாட்டுப் பயணியர்களிடமிருந்து பணப்பரிவர்த்தனைகளுக்கான கட்டணம் வசூலிக்கிறது.[1]மேலும் வெளிநாட்டிலிருந்து வரும் பொருட்களுக்கு வரி வசூலிக்கிறது. மேலும் விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் பன்னாட்டு எல்லைச் சாவடிகளில் தங்கம், வைரம், போதை மருந்து போன்றவைகள் கடத்துவதை கண்காணிக்கிறது.[2]மத்திய மறைமுக வரிகள் வாரியத்தின் கீழ் சரக்கு சேவை வரி புலனாய்வு தலைமை இயக்குநரகம் இயங்குகிறது.

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு