மத்தேசியுயசைட்டு

யுரேனைல் வனேட்டு-சல்பேட்டுக் கனிமம்

மத்தேசியுயசைட்டு (Mathesiusite) என்பது K5(UO2)4(SO4)4(VO5)•4(H2O) என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். சல்பேட்டுக் கனிமம் என்று இதை வகைப்படுத்துகிறார்கள். இக்கனிமத்தில் பொட்டாசியம், வனேடியம், யுரேனியம் ஆகிய தனிமங்கள் கலந்துள்ளன. சுரங்கம் வெட்டி முடிக்கப்பட்ட பின்னர் தோன்றும் இரண்டாம் நிலை கனிமமாக இது தோன்றுகிறது. செக் குடியரசின் யாச்சிமோவ் சுரங்க மாவட்டத்தில் இக்கனிமம் கண்டறியப்பட்டது. 2013 ஆம் ஆண்டில் பொகிமியாவில் கனிமவியல் ஆய்வுகளை மேகொண்டு வந்த யோகான்னசு மத்தேசியசு .[1](1504-1565) அவர்கள் பெயர் இக்கனிமத்திற்கு வைக்கப்பட்டது.

மத்தேசியுயசைட்டு
Mathesiusite
பொதுவானாவை
வகைகனிமம்
வேதி வாய்பாடுK5(UO2)4(SO4)4(VO5)•4(H2O)
இனங்காணல்
நிறம்பசுமஞ்சள்
படிக அமைப்புநாற்கோணம்
பிளப்புசரிபிளவு
முறிவுஒழுங்கற்றது
விகுவுத் தன்மைநொறுங்கும்
மோவின் அளவுகோல் வலிமை2
கீற்றுவண்ணம்பசும் வெண்மை
அடர்த்தி4.02 கி/செ.மீ3 (கணக்கிடப்பட்டது)

மேற்கோள்கள்

தொகு
  1. Plášil, J.; Veselovský, F.; Hloušek, J.; Škoda, R.; Novák, M.; Sejkora, J.; Čejka, J.; Škácha, P. et al. (April 1, 2014). "Mathesiusite, K5(UO2)4(SO4)4(VO5)(H2O)4, a new uranyl vanadate-sulfate from Jáchymov, Czech Republic". American Mineralogist 99 (4): 625-632. doi:10.2138/am.2014.4681. http://ammin.geoscienceworld.org/content/99/4/625. பார்த்த நாள்: 13 June 2017. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மத்தேசியுயசைட்டு&oldid=2663435" இலிருந்து மீள்விக்கப்பட்டது