மந்தனா ஓவியங்கள்

மத்தியப்பிரதேசத்தின் பாரம்பரிய ஓவியவகை

மந்தனா ஓவியங்கள் (Mandana paintings) என்பவை இந்தியாவின்   இராஜஸ்தான் மற்றும் மத்தியப்பிரதேசத்தில் வீட்டின் தரை மற்றும் சுவர் ஆகிய இடங்களில் வரையப்படும் ஓவியமாகும்.[1] இவ்வோவியங்கள் வெறும் அழகுக்காக மட்டும் வரையப்படாமல் ஒரு வழிபாட்டு சடங்காக  வீட்டின் பாதுகாப்புக்காகவும், உடல் நலத்திற்காகவும், வீட்டில் இறைவனை வரவேற்கவும் விழாக்காலங்களில்  வரையப்படுவதாகும்.

 கைவினை அருங்காட்சியகத்தில் உள்ள, ஒரு திருமண வைபவத்தை விவரிக்கும் ஒரு மந்தனா ஓவியம்

ராஜஸ்தான் மாநிலத்தின் சவாய் மாதோபூர் பகுதிகளின் சிற்றூர்புரங்களில் இவ்வகை சுவரோவியங்கள் சிறப்பாக வரையப்படுகின்றன. பெரும்பாலும் இக்கலை நாட்டுப்புறப் பெண்களால் சரியாவும், சமச்சீராகவும், துல்லியமாக  வடிவமைத்து வளர்கப்பட்டுவருகிறது.  மாட்டுச் சாணம்,  ரதி என்னும் ஒரு உள்ளூர் களிமண்,  சுண்ணாம்புத் தூள் ஆகியவை வண்ணக் கலவைகள்  உருவாக்க பயன்படுகின்றன. பருத்தி, முடிக் கற்றை ஆகியவற்றை எழுதுகோலாக அல்லது தூரிகையாக பயன்படுத்துகின்றனர்.  இந்த ஓவியங்களில்  விநாயகர், மயில்கள், பலவகை வேலை செய்யும் பெண்கள், புலிகள், மலர்கள்  முதலியன இடம்பெறுகின்றன.[2]

மேற்கோள்கள் தொகு

  1. "தெய்வங்களை சுவீகரிக்கும் 'மந்தனா'". தி இந்து (தமிழ்). 19 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 7 மே 2016. {{cite web}}: Check date values in: |date= (help)
  2. Kamboj, B. P. (2003). Early wall painting of Garhwal. New Delhi: Indus Publ. Co.. பக். 158. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:8173871396. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மந்தனா_ஓவியங்கள்&oldid=3577978" இலிருந்து மீள்விக்கப்பட்டது