மனநல சுகாதார நிறுவனம்

மனநல சுகாதார நிறுவனம், எர்ரகடா (Institute of Mental Health, Erragadda) என்பது எர்ரகடா மனநல மருத்துவமனை என்றும் அழைக்கப்படுவது ஐதராபாத்து மாநிலத்தில் நிசாம் ஆட்சியின் போது நிறுவப்பட்ட பழமையான சுகாதார நிறுவனங்களில் ஒன்றாகும்.[1] இது ஐதராபாத்தில் உள்ள எர்ரகடாவில் அமைந்துள்ளது. இந்நிறுவனத்தினை தெலங்காணா அரசு நடத்தி வருகின்றது. இது மாநிலம் முழுவதும் உள்ள மனநல நோயாளிகளுக்கு மருத்துவச் சேவை செய்கிறது.

மனநல சுகாதார நிறுவனம்
Institute of Mental Health
தெலங்காணா அரசு
அமைவிடம் எர்ரகடா, ஐதராபாத்து (இந்தியா), இந்தியா
மருத்துவப்பணி பொது
வகை சிறப்பு பிரிவு
இணைப்புப் பல்கலைக்கழகம் கலோஜி நாராயண ராவ் சுகாதார அறிவியல் பல்கலைக்கழகம்
அவசரப் பிரிவு ஆம்
படுக்கைகள் 600
நிறுவல் 1895
பட்டியல்கள்

வரலாறு

தொகு

மன தஞ்சம் என்று பொருள்படும் தாருல்-மஜனைன் என நிறுவப்பட்ட இந்த மருத்துவமனை, சஞ்சல்குடா மத்தியச் சிறையில் தொடங்கப்பட்டு 400 படுக்கைகளுடன் ஜல்னா (மகாராட்டிரா)க்கு மாற்றப்பட்டது. இந்த நிறுவனம் 1895-1907-ல் ஜல்னாவிற்கு (அந்த நேரத்தில் நிசாம் ஆதிக்கத்தின் ஒரு பகுதி) மாற்றப்பட்டது. இந்நிறுவனத்தின் பெயர் தாருல்-மஜனைன் என்பதிலிருந்து மனநோய்களுக்கான மருத்துவமனை, ஜல்னா என மாற்றப்பட்டது.[2]

ஐதராபாத் மாநிலம் (1948-56) உருவாக்கப்பட்ட பின்னர், ஜல்னா மகாராட்டிராவுடன் இணைக்கப்பட்ட பிறகு, 1953-ல் இந்த நிறுவனம் ஜல்னாவிலிருந்து ஐதராபாத்திற்கு மாற்றப்பட்டது. மருத்துவர் ஆர். நடராஜன் கடைசியாக அரசு கண்காணிப்பாளராக இருந்தார்.[1]

விரிவாக்கம்

தொகு

2006ஆம் ஆண்டு தேசிய மனநலத் திட்டத்தின் கீழ் நீதிமன்றம் மற்றும் குற்றவியல் வழக்குகளுக்காக பிரத்தியேகமாக 150 படுக்கைகள் கொண்ட புதிய பகுதியுடன் இந்நிறுவனம் விரிவுபடுத்தப்பட்டது.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Deo, Neeraj (December 2012). "Darul Majanine, Jalna to Institute of Mental Health, Erragadda Hyderabad: The Forgotten History". Research Aaj Tak 1 (3): 125–129. https://www.researchgate.net/publication/234004541. பார்த்த நாள்: 9 October 2021. 
  2. Deo, Neeraj (August 8, 2021). "जालन्यातील दारुल मजानिन ते प्रादेशिक मनोरुग्णालय…एक व्यथा, जी होतेय कथा!" (in mr-IN). Loksatta. https://www.loksatta.com/blogs/history-of-jalna-mental-hospital-moved-to-hyderabad-now-janata-vidyalay-pmw-88-2556624/. 
  3. "The Hindu : Andhra Pradesh / Hyderabad News : Institute of Mental Health to be modernised with Rs. 3-cr. fund". 8 December 2007. Archived from the original on 8 December 2007.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மனநல_சுகாதார_நிறுவனம்&oldid=3703141" இலிருந்து மீள்விக்கப்பட்டது