மனனா கோக்லாத்சே

மனனா கோக்லாத்சே (Manana Kochladze) யூரேசிய நாடான சியார்ச்சியாவைச் சேர்ந்த ஓர் உயிரியலாளர் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆவார்.1972 ஆம் ஆண்டு இவர் பிறந்தார். பரவலான அரசாங்க ஊழல் எதிர்ப்பு மற்றும் பன்னாட்டுத் தொழில்துறை நலன்களுக்கு முகங்கொடுக்கும் மனானா கோக்லாத்சே சோவியத் குடியரசின் உள்ளூர் கிராமவாசிகளையும் சுற்றுச்சூழலையும் பாதுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டார்.

மனனா கோக்லாத்சே
Manana Kochladze
பிறப்பு
1972
தேசியம்சியார்ச்சியன்
கல்விஉயிரியலாளர்
அறியப்படுவதுசுற்றுச்சூழல் ஆர்வலர்
விருதுகள்கோல்டுமேன் சுற்றுச்சூழல் விருது (2004)

சுற்றுச்சூழல் பிரச்சாரங்களுக்காக குறிப்பாக எண்ணெய் குழாய்களால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளைப் பாதுகாப்பாது தொடர்பான முன்னெடுப்புகளுக்காக 2004 ஆம் ஆண்டில் இவருக்கு கோல்டுமேன் சுற்றுச்சூழல் பரிசு வழங்கப்பட்டது. [1] முதலில் ஒரு விஞ்ஞானியாக பயிற்சி பெற்ற இவர் சுற்றுச்சூழல் ஆர்வலராக மாறுவதற்காக கவனத்தை மாற்றினார். 1990 ஆம் ஆண்டில் அவர் பசுமை மாற்று என்ற ஓர் அரசு சாரா அமைப்பை நிறுவினார்.[2] சியார்சியாவின் சமீபத்திய வரலாற்றில் மிக முக்கியமான சுற்றுச்சூழல் பிரச்சாரங்களை இவ்வமைப்பு மூலம் கோக்லாத்சே வழிநடத்தினார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Manana Kochladze. 2004 Goldman Prize Recipient. Europe". goldmanprize.org. பார்க்கப்பட்ட நாள் 16 September 2019.
  2. Nijhuis, Michelle (24 April 2004). "Manana Kochladze strives to protect Georgia from a BP oil pipeline". Grist. பார்க்கப்பட்ட நாள் 16 September 2019.

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=மனனா_கோக்லாத்சே&oldid=3186253" இலிருந்து மீள்விக்கப்பட்டது