மனாமா

பஹ்ரைனின் தலைநகரம் மற்றும் மிகப்பெரிய நகரம்

மனாமா (ஆங்கில மொழி: Manama, அரபு மொழி: المنامة‎), பஹ்ரைன் நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். இதன் மக்கட்தொகை அண்ணளவாக 155,000 ஆகும். நீண்ட காலமாக பாரசீக வளைகுடாவில் முக்கிய வர்த்தக மையமாக விளங்கும் இந்நகரில் பலதரப்பட்ட மக்கள் வசிக்கின்றனர். போர்த்துக்கேயர்களினதும் பாரசீகர்களினதும் ஆதிக்கம் மற்றும் அல் சவூத், ஓமானின் படையெடுப்புகளின் பின்னர் 19ஆம் நூற்றாண்டில் சுதந்திர நாடானது. பஹ்ரைனின் எண்ணேய் வளத்தின் பயனாக, இருபதாம் நூற்றாண்டில் துரித வளர்ச்சியடைந்த இந்நகரம் மத்திய கிழக்கில் ஒரு பிரதான பொருளாதார மையமாக உள்ளது.

மனாமா
المنامة al-Manāma
மனாமாவின் அமிவிடம்
மனாமாவின் அமிவிடம்
நாடுபஹ்ரைன்
ஆளுநரகம்தலைநகர ஆளுநரகம்
அரசு
 • ஆளுநர்Humood bin Abdullah bin Hamad Al Khalifa
மக்கள்தொகை
 (2010)
 • நகரம்1,57,474
 • அடர்த்தி5,304/km2 (13,740/sq mi)
 • பெருநகர்
3,29,510
இணையதளம்http://www.capital.gov.bh
"https://ta.wikipedia.org/w/index.php?title=மனாமா&oldid=3874247" இலிருந்து மீள்விக்கப்பட்டது