மனிசா ராமதாசு
மனிசா ராமதாசு (Manisha Ramadass) இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழில்முறை இணை இறகுப்பந்தாட்ட வீராங்கனையாவார். தற்போது சென்னையில் வசித்து வரும் இவர் 2005 ஆம் ஆண்டு சனவரி மாதம் 27 ஆம் தேதியன்று பிறந்தார். திருவள்ளூரைச் சேர்ந்த மனிசா பெண்கள் ஒற்றையர் பிரிவு இணை இறகுப்பந்தாட்ட உலக வெற்றியாளர் போட்டியில் வெற்றி பெற்று தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இறுதிப் போட்டியில் சப்பான் நாட்டு வீராங்கனை மாமிக்கோ டொயட்டாவை 21-15, 21-15 என்ற நேர் புள்ளிகளில் இவர் வென்றார். இதே தொடரில் இரட்டையர் பிரிவிலும், கலப்பு இரட்டையர் பிரிவிலும் மனிசா இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கத்தை பெற்றுத் தந்துள்ளார். மேல் மூட்டுகளில் குறைபாடு உள்ள வீராங்கனைகள் பிரிவு இணை இறகுப்பந்தாட்ட உலக வெற்றியாளர் போட்டியில் வெற்றி பெற்ற முதல் தமிழக வீராங்கனை என்ற சிறப்பு மனிசா ராமதாசுவிற்கு கிடைத்துள்ளது. 2022 ஆம் ஆண்டில்தான் மனிசா பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பங்கேற்க ஆரம்பித்தார். அதே ஆண்டிலேயே எசுப்பானியாவில் நடைபெற்ற இரண்டாம் தர இணை இறகுப்பந்தாட்டப் போட்டியில் வெற்றி பெற்று பட்டம் வென்றார்.
மனிசா ராமதாசு Manisha Ramadass | |||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
நேர்முக விவரம் | |||||||||||||||||
நாடு | இந்தியா | ||||||||||||||||
பிறப்பு | 27 சனவரி 2005 சென்னை, தமிழ்நாடு, இந்தியா | ||||||||||||||||
வசிக்கும் இடம் | சென்னை, இந்தியா | ||||||||||||||||
விளையாடிய ஆண்டுகள் | 2021–முதல் | ||||||||||||||||
கரம் | இடதுகை | ||||||||||||||||
பெண்கள் ஒற்றையர் மேல்மூட்டு குறைபாடு 5 பிரிவு பெண்கள் இரட்டையர் மேல்மூட்டு குறைபாடு 3-5 பிரிவு | |||||||||||||||||
பெரும தரவரிசையிடம் | 1 (பெண்கள் ஒற்றையர், 22 ஆகத்து 2022) 1 (பெண்கள் இரட்டையர், மந்தீப் கௌர் உடன் 04 சூலை 2022) 12 (கலப்பு இரட்டையர், பிரமோத் பகத் உடன் 22 ஆகத்து 2022) | ||||||||||||||||
தற்போதைய தரவரிசை | 1 (பெண்கள் ஒற்றையர், 10 சனவரி 2023) 1 (பெண்கள் இரட்டையர் மந்தீப் கௌர் உடன், 10 சனவரி 2023) 12 (கலப்பு இரட்டையர் பிரமோத் பகத் உடன், 10 சனவரி 2023) (10 சனவரி 2023) | ||||||||||||||||
பதக்கத் தகவல்கள்
|
பன்னாட்டு போட்டிகளில் எசுப்பானியா, பிரேசில், பகுரைன், ஐக்கிய அரபு அமீரகம், கனடா, சப்பான் என பல்வேறு நாடுகளில் நடைபெற்ற போட்டிகளில் 8 தங்கம், ஒரு வெள்ளி, 4 வெண்கலப் பதக்கங்களை மனிசா ராமதாசு வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.[1]
விருதுகள்
தொகுவிருது | ஆண்டு | பிரிவு | முடிவு | மேற்கோள்கள் |
---|---|---|---|---|
உலக இறகுப்பந்தாட்ட கூட்டமைப்பு விருது |
2021-2022 | இணை விளையாட்டு ஆண்டின் சிறந்த வீரர் |
வெற்றி | [2][3] |
மேற்கோள்கள்
தொகு- ↑ "திருவள்ளூர் ஸ்ரீ நிகேதன் பள்ளி மாணவி உலக பாரா பேட்மின்டன் சாம்பியன்". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2023-01-15.
- ↑ "Manisha Ramadass wins BWF Female Para-Badminton Player of th .. Read more at: http://timesofindia.indiatimes.com/articleshow/96024668.cms?utm_source=contentofinterest&utm_medium=text&utm_campaign=cppst". Times of India. https://timesofindia.indiatimes.com/sports/badminton/manisha-ramadass-wins-bwf-female-para-badminton-player-of-the-year-award/articleshow/96024668.cms. பார்த்த நாள்: 15 January 2023.
- ↑ https://olympics.com/en/news/bwf-player-of-the-year-2022-female-para-badminton-manisha-ramadass