மனிதரின் தசைத் தொகுதி
மனிதரின் தசைத் தொகுதி (human musculoskeletal system அல்லது human locomotor system) என்பது ஒரு தனி மனித உடலில் காணப்படும் அனைத்துத் தசைகளினதும், வன்கூடுகளினதும் கூட்டான அமைப்பாகும். மனித உடலில் ஏறத்தாழ 650 வன்கூட்டுத் தசைகள் உள்ளன எனக் கருதப்படுகிறது.[1] ஆயினும், மிகச் சரியான எண்ணிக்கையைக் கூறுவது கடினமான இலக்காகும். பொதுவாகத் தசைகளின் தொழிற்பாடு யாதெனில், உடல் அசைவுக்கு ஏற்ப உடந்தையாக செயற்படுதல் ஆகும். இந்தத் தொழிலுக்கு எலும்புகளும், மூட்டுகளும், தசைநாண்களும், உடல் அசைவுக்குத் தேவையான ஏனைய அமைப்புக்களும் ஒருங்கிணைந்து இயங்க வேண்டும். தசையின் 75 பங்கு நீரால் ஆனது; 25 பங்கு பிசிதம் ஆகும். தசைச்சுருக்கத்தில் பங்கு கொண்டிருக்கும் முக்கிய பிசிதம் 'ஆக்டோமையோசின்' என்ற சிக்கலான பிசிதமாகும்.
மனிதரின் தசைத் தொகுதி | |
---|---|
1911 பிரித்தானிக்கா கலைக்களஞ்சியத்தில் இருந்து மனித செயல்பாட்டு அமைப்பின் அம்சங்கள் | |
அடையாளங்காட்டிகள் | |
MeSH | D009141 |
TA2 | 351 |
FMA | 7482 |
உடற்கூற்றியல் |
எலும்பு தசை
தொகுஎலும்பு தசைகளில் முக்கியமானது பந்தகங்கள் எனப்படும். இவை உடல் எலும்புகளை இணைத்து,எலும்புகள் சீராக இருக்கவும், அதற்குரிய நார் தசைகளும் பயன்படுகின்றன. இவை மிக மெல்லிய நார் இழைகள் போன்றும், ஒளி ஊடுருவக்கூடியதாகவும், நுண்ணோக்கியில் காணும் போது, வெண்மையாகவும், சற்று கருமையாகவும் காணப்படுகின்றன. குறுக்க நார் தசைகள் சற்று மேடாகவும் காணப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, கெண்டைக்கால் தசைகளைக் கூறலாம்.
இயக்கு தசை
தொகுஇவைகளில் முழுக்க முழுக்க தசைநாண்களால் ஆனவை. அதன் உடற்செயலுக்கு ஒப்ப வடிவம் பெற்றுள்ளன. நாக்கில் அமைந்துள்ள தசைகளுக்கு ஒப்ப அதன் வடிவம் நீள்வடிவம் உடையன. மலவாயில் அமைந்து இருக்கும் தசைகள் வளைய வடிவத்திலும்,சுருங்கி விரியும்திறன் கொண்டவையாகவும் அமைந்துள்ளன. ஆண் இனப்பெருக்க உறுப்பின் தசைகளில், உடலின் இரத்தம் சேர்வதற்கு ஒப்ப, பை போன்ற அமைப்புகளும், பெண் இனப்பெருக்க உறுப்பின் தசைகள் முற்றிலும் வேறுபட்டும், பிரசவ காலத்தில் சுரக்கும் நொதியின் காரணாமா அதிகம் விரிந்து சுருங்கும் தன்மையைக் கொண்டதாக இருக்கிறது.
எதிர்திசை தசைகள்
தொகுமுழங்கை, முழங்கால் போன்றவற்றில் ஒரே திசையில் செயல்படக் கூடியவைகளாக இருக்கின்றன. இவை இருதலைத் தசை, முத்தலைத் தசை என வகைப்படுத்தப்படுகின்றன. இத்தகு தசைகள் நுனியில் இணைப்புகளைக் கொண்டிருக்கும். இந்த 'சினர்சிட்டு' தசைகள் சுருக்கத்தால் இயங்குகின்றன. முழங்கையை மடக்குவதில், 'பிராசியாலிசு' என்ற வேறு இரண்டு மடக்குத்தசையினால் இருதலைத்தசை சுருங்குகின்றன. மறுதலை செய்கையானது, முத்தலைத்தசையால் நடக்கும் சிக்கலற்ற செயலாகும். சில நேரங்களில் ஒருவழிப்படுத்திய தசைச்செயல்கள் அசையும் பகுதியிலிருந்து சிறிது தூரத்தில் இருக்கின்றன. எடுத்துக்காட்டாக,விரல்களை மடக்கும் பொழுது, தோளும், புயம் முழுவதும் நிலையாக வைக்கப்பெற்று முத்தலைத்தசையும், இருதலைத்தசையும் நிலைநிறுத்தும் தசைகளாக செயற்படுகின்றன.
பாசியா
தொகுநார் போன்ற இழையத்தின் 'பாசியா' எனப்படும் அகன்ற சவ்வின் துணையால் இயங்கும்போது, தசைகள் தத்தம் இடங்களில் நிலைநிறுத்தப்படுகின்றன. 'பாசியா' என்பது மனித உடல் சட்டகத்திற்கும், உள்ளுறுப்புகளுக்கும் ஆதாரமாக இருக்கும் இழையமாகும். இதனால் அசைவும் கட்டுப்படுத்தப்படுகின்றன; சாயல்களும் நிலைநிறுத்தப்பெறுகின்றன.
மேற்கோள்கள்
தொகு- ↑ Poole, RM, ed. (1986). The Incredible Machine. Washington, DC: National Geographic Society. pp. 307–311. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-87044-621-5.