மனித நம்பகத்திறன்

மனித நம்பகத்திறன் அல்லது மனிதப் பெறுபேறு என்பது மனிதக் காரணிகள் மற்றும் பணிச் சூழலியலுடன் தொடர்பான துறையாகும். இது உற்பத்தித் துறை, மருத்துவம், அணுக்கரு வலு உள்ளிட்ட துறைகளில் மனித நம்பகத்தன்மை பற்றியது. மனிதப் பெறுபேறு முதுமை, மனோநிலை, பௌதீக உடல்நலம், மனப்பாங்கு, மனக்கிளர்ச்சி, சில பொதுவான தவறுகளில் நாட்டம், தவறுகள், அறிவார்ந்த சார்புநிலை என பல்வேறு காரணிகளால் பாதிக்கப்படும்.

முறைமைகளின் தாங்கு தன்மையில் மனிதர்களின் பங்களிப்புகள், மனிதத் தவறுகள் மற்றும் கவனக் குறைவுகாரணமாக பாதகமான விளைவுகளை ஏற்படும் சாத்தியம், குறிப்பாக இன்றைய நிலையில் மனிதன் பாரிய சமூக தொழில்நுட்ப முறைமைகளின் இன்றியமையாத கூறாக இருத்தல் காரணமாக மனித நம்பகத்திறன் மிகவும் முக்கியத்துவமிக்கதாகின்றது. பயனர் மையவடிவமைப்பு மற்றும் தவறு சகித்தல் வடிவமைப்பு என்பன தொழில்நுட்பத்தை வினைத்திறனுடன் மனிதர்கள் பிரயோகிக்க பொருத்தமானதை விவரிக்கப் பயன்படுத்தும் இரு பதங்களாகும்.

மனித இயல்பின் பொதுவான பொறிகள்

தொகு

மக்கள் தாம் வேலை செய்யும் போது கட்டுப்பாட்டைப் பேணுவதற்காக அவர்களின் திறமையை மிகை மதிப்பீடு செய்ய முற்படுகின்றர். கீழே விபரிக்கப்படும் மனித இயல்பின் பொதுப்பண்பு, வேலை ஒன்று சிக்கலான வேலைச் சூழலில் ஆற்றப்படும் போது விசேடமாக புத்துயிர்ப்பு பெறுதலாகும். [1]

அழுத்தம் ஒருங்கு சேர்ந்து மனிதன் மீது அதிக வலுவைச் செலுத்துவதன் காரணமாக எதிர்மறையான விளைவுகளைத் தருவது அழுத்தத்துடனான பிரச்சினை ஆகும்.

மன சுமையைத் தவிர்த்தல் ஆழமான செறிந்த சிந்தனைகளில் அதிக கவனம் நீண்ட காலத்திற்கு தேவைப்படுவதால் அவற்றில் இணைவதில் மனிதர்கள் தயக்கம் காட்டுகின்றனர்.

மனச்சுமையக் குறைத்து தீர்மானம் எடுக்கும் செயற்பாட்டை துரிதப்படுத்தவதற்காக மனக் கோடல்கள் அல்லது குறுக்குவழிகள் அடிக்கடி பயன்படுத்தப்படுகின்றன, அவையாவன:

  • எடுகோள்கள் – மெய்மை உறுதிசெய்யப்படாமல் உண்மையென ஏற்றுக்கொள்ளல் (அ) சரியானதாக வழங்கப்படும் நிலைமை.
  • பழக்கம் – அடிக்கடி மீளமீள நடப்பதால் பெற்றுக்கொள்ளப்பட்ட தன்னுணர்வு அற்ற நடத்தைக் கோலம்.
  • உறுதிப்படுத்தல் பக்கச்சார்பு – நடைமுறையிலுள்ள தீர்வு ஒன்றை கைவிடத் தயங்குதல்.
  • ஒத்தவியல்பு பக்கச்சார்பு – ஒத்தவியல்பு கொண்டதாகக் காணப்படும் தீர்வை அதையொத்த இன்னொரு நிலைமைக்கு வழங்குதல்.
  • அடிக்கடி நிகழல் பக்கச்சார்பு- சூதாட்டம் இதில் அடிகக்டி பயன்படுத்தும் தீர்வு பயன்பெறும்.
  • கிடைத்தகு பக்கச்சார்பு- உடனடியாக மனதில் தோன்றும் முடிவொன்றைக் கூறுதல்.

மட்டுப்படுத்தப்பட்ட பணியாற்றும் ஞாபகசக்தி - பிரச்சினைகளைத் தீர்ப்பதில் குறுங்கால ஞாபகசக்தியே பணிமேடையாகும்.

மட்டுப்படுத்தப்பட்ட கவன வளங்கள் - இரண்டு அல்லது அதற்கு அதிகமான நடவடிக்கைகளில் கருத்தூன்ற முடியாமையால் பிரச்சினைகளை தீர்ப்பதில் தேவையான தகவல்கள் சவாலுக்குரியதாயிருத்தல்.

மனோபாவம் - எதை அடைய வேண்டுமோ (இலக்கு)அதை நோக்கியதாகவே மக்களின் கவனமும் இருக்கும். தவிர்க்க வேண்டியதில் குறைந்த கவனம் இருக்கும்.ஏனெனில் மனிதர்கள் இயல்பாகவே இலக்கை அடிப்படையாகக் கொண்டவர்கள்.எனவே மக்கள் எது தமக்குத் தேவை என மனம் எதிர்பார்கின்றதோ அதையே கான விளைகின்றனர்.

தமது சொந்த தவறை காண்பதில் கடினப்பாடு - தனிமனிதர்கள், குறிப்பாக தனித்து பணியாற்றுபவர்கள் தவறுவிடுவதில் பாதிக்கப்படுகின்றனர்.

மட்டுப்படுத்தப்பட்ட முன்நோக்கு - மனிதர்கள் உள்ள எல்லாவற்றையும் காணக்கூடியவர்கள் அல்லர். மனித மனம் பிரச்சினை ஒன்றைத் தீர்க்கக் கூடிய தீர்மான சவால்கள் எல்லாவற்றையும் உள்வாங்க முடியாததாயிருக்கும்.

உணர்ச்சி வசப்பாடு / சமூக காரணிகளால் பாதிக்கப்படும் தன்மை - கோபம் மற்றும் சங்கடம் என்பன தனிப்பட்ட மற்றும் குழுப் பெறுபேறுகளில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்துகின்றன.

சோர்வு - மக்கள் களைப்படைகின்றனர். பௌதீக, உணர்ச்சி மற்றும் உளவியல் சோர்வு என்பன தவறுகளுக்கும் பிழையான தீர்ப்புகளுக்க்கும் வழிவகுக்கின்றன.

வரவு - சில வேலையாட்கள் தொழில் நிலையத்தின் தேவைகளின் போது பிரசன்னமாயிருப்பர். அவர்கள் இல்லாத சந்தர்ப்பங்களில் திறன் குறைந்ததாக காணப்படும்.

பகுப்பாய்வு நுட்பங்கள்

தொகு

மனித நம்பகத்தன்மை பகுப்பாய்வுகளுக்கு பல்வேறு முறைகள் காணப்படுகின்றன.[2][3] இவற்றில் இரண்டு பொதுவான முறைகள் உள்ளன. அவை நிகழ்தகவியல் இடர் மதிப்பீடு (PRA) மற்றும் கட்டுப்படுத்தல் அறிவுக் கோட்பாடு என்பனவாகும்.

PRA-ஐ அடிப்படையாகக் கொண்ட நுட்பங்கள்

தொகு

மனித நம்பகத்திறனை பகுப்பாய்வு செய்யும் ஓரு முறை நிகழ்தகவியல் இடர் மதிப்பீடு (PRA) ஆகும். மின்வலு நிலையம் ஒன்றில் உபகராணம் ஒன்று செயலிழக்கலாம் அதேபோல் மனிதர் தவறு ஒன்றை செய்யலாம். இந்த இரண்டு சந்தர்ப்பங்களும் கருவியின் தொழிற்பாடு இழப்பு மற்றும் மனிதரின் பொறுப்புகள் பற்றிய பகுப்பாய்வு இந்த தவறுக்கான காரணத்தைக் கண்டறிய உதவும். இந்த அடிப்படையான யோசனையே மனிதத் தவறுவீத எதிர்வுகூறல் நுட்பத்தின் (THERP) பின்னணியாகும். .[4] THERP என்பது PRA உடன் இணைக்கக்கூடிய மனித வழு நிகழ்தகவை உருவாக்குவதாகும்.

மேற்கோள்கள்

தொகு
  1. https://www.standards.doe.gov/standards-documents/1000/1028-BHdbk-2009-v1/@@images/file DOE-HDBK-1028-2009
  2. Kirwan and Ainsworth, 1992
  3. Kirwan, 1994
  4. Swain & Guttmann, 1983
"https://ta.wikipedia.org/w/index.php?title=மனித_நம்பகத்திறன்&oldid=2867767" இலிருந்து மீள்விக்கப்பட்டது