மனித வளர்ச்சியாக்கம் (உயிரியல்)

மனித வளர்ச்சியாக்கம் (Human development) என்பது மனிதனின் உடல் வளர்ச்சி முழுமையடைவதற்காக நடக்கக் கூடிய செயல்முறையாகும். உயிரியலில், மனித வளர்ச்சி என்பது ஒரு செல், சைகோட் முதல் முழுமையடைந்த மனிதனாக வளர்வது வரை வளர்ச்சி என்று கருதப்படுகிறது.

உயிரியல் வளர்ச்சியாக்கம்

தொகு

பொதுவான தேற்றம்

தொகு
 
விந்தணு முட்டையைக் கருவுறச் செய்தல்

உயிாியலின்படி, 'மனித வளர்ச்சியானது கருத்தரிப்பின் போதே தொடங்குகிறது'. விந்தணுவானது சினை முட்டையினுடைய சவ்வினுள் வெற்றிகரமாக உள்ளே செல்வது கருவுறுதல் எனப்படுகிறது. விந்தணு மற்றும் முட்டை இரண்டினுடைய மரபணு பொருட்கள் சேர்ந்து ஒரே செல்லாக மாறுவதை சைகோட் என்கிறோம். இதிலிருந்து தான் பிறப்பிற்கு முன் ஏற்படக் கூடிய வளர்ச்சியானது ஆரம்பிக்கிறது.[1]

கருவுறுதலின் நிலையானது, கரு உருவானதிலிருந்து கரு ஒட்டுதல் வரையான காலம் ஆகும். இந்நிலையானது 10 நாட்களில் கருத்தங்கல் நிலையோடு நிறைவு பெறுகிறது.[2] சைகோட் முழுவதும் மரபணு பொருட்களே உள்ளன. சைகோட்டானது வளர்ச்சியடைந்து கருவாகிறது. சுருக்கமாக, கருவளர்ச்சியானது நான்கு நிலைகளைக் கொண்டது. அவையாவன: மொருலா நிலை, பிளாஸ்டுளா நிலை, கேஸ்டுளா நிலை மற்றும் நியுருலா நிலையாகும். கரு ஒட்டுதலுக்கு முன்பாக, கரு புரத ஓட்டுக்குள் இருக்கும். சோனா பெலுசிடா, மைடாசிஸ் முறையில் செல் பிரிதலை நிகழ்த்துகிறது. கருவுறுதல் அடைந்து ஒரு வாரத்தில் கரு அளவில் பெரிதாகி இருக்காது ஆனால், சோனா பெலுசிடாவிலிருந்து விடுபட்டு தாயினுடைய கருப்பையின் சுவரில் ஒட்டிக் கொள்கிறது. கருப்பை எண்டோமெட்ரியத்தில் பல்வேறு வினைகள் ஏற்பட்டு கருப்பை செல்கள் வேகமாக பெருக்கம் அடைந்து, கருவை சூழ்ந்து கொள்கிறது. இதனால் கருவானது, கருப்பையின் திசுவில் புதைந்துவிடுகிறது. அதே நேரத்தில் கரு, முளையத்துக்குரிய மற்றும் மூலவுருவுக்கப்புறமான திசுக்களாக வளர்ச்சியடைகிறது. இறுதியில், உருப்பெற்றக் கருவினுடைய சவ்வும் மற்றும் நஞ்சுக்கொடியும் உருவாகிறது.

மனிதனில், பிறப்பிற்கு முன் ஏற்படக் கூடிய வளர்ச்சியில் கருவானது கருக்குழவி என்றழைக்கப்படுகிறது. கருவுறுதலில், கரு நிலையிலிருந்து கருக்குழவி நிலைக்கு விதி கட்டுப்பாடு ஏதும் இல்லாமல் மாறுவதற்கு எட்டு வாரங்கள் ஆகின்றன. கருவினை ஒப்பிடும் போது, கருக்குழவியானது நன்கு அறியக் கூடிய வெளிப் பண்புகளையும் உள்உறுப்புகள் வளர்வீரியம் கொண்டும் காணப்படுகின்றன. மனித வளர்ச்சியாக்கம் பேன்றே மற்ற சிற்றினங்களிலலும் ஒத்த வகையிலேயே வளர்ச்சியானது ஏற்படுகிறது. 4 வாரங்களில் தெளிவான ஆம்னியான், திரவத்தைக் கொண்ட பையில் கருவைச் சுற்றி உருவாகிறது.

உடல் சார்ந்த நிலைகள்

தொகு

பின்வருவன உடல் வளர்ச்சி நிலைகளில் சில தோராயமான வயது வரம்புகள்:

 
பிறப்பிற்கு முன் ஏற்படக் கூடிய வளர்ச்சி நிலைகள்
  • பிறப்பிற்கு முன் ஏற்படக் கூடிய வளர்ச்சி: விந்துவும் முட்டையும் இணைந்து கருவுறுதல் முதல் பிறப்பு வரை
  • கரு உருவாதல்: கருவுறுதலில் இருந்து 8 வாரங்கள்
  • சைகோட்: ஒரு செல் நிலையிலிருந்து கருவுறுதலுக்கு பிந்தைய நிலைவரை
  • பிளாஸ்ட்டோ சிஸ்ட்: கருவானது வெற்றுக் கோளமாக மாறும், கருஒட்டுதலுக்கு முன் நிலை
  • பிந்தைய உள்வைப்பு கரு: இதன் காலமானது, கருவுறுதலுக்குப் பிந்தைய 1-8 வார காலம் ஆகும்
  • கருக்குழவி: கர்ப்பத்தின் பத்தாவது வாரம் - பிறப்பு

மனிதக் கருவின் கர்ப்பக்காலம் சராசரியாக 38 வாரங்கள் ஆகும். இது கரு உருவான காலம் முதல், பிறப்பு வரை உள்ள காலத்தைக் குறிக்கிறது. கரு உருவான முதல் 8 வாரங்களில், வளர்ச்சியடையும் உயிரியை கரு என்கிறோம். இதன் பொருள் 'உள் வளர்தல்' என்பதாகும். இதை கரு காலகட்டம் என்கிறோம். இந்த காலகட்டத்தில், முக்கியமான உடல் அமைப்புகள் உருவாகின்றன. எட்டாம் வார முடிவிலிருந்து பிறப்பு வரை வளரும் மனிதக் கருவை சிசு என்கிறோம். இக்காலகட்டத்தை சிசு காலகட்டம் என்கிறோம். இந்த காலகட்டத்தில், உடல் பெரிதாக வளர்ச்சியடைவதுடன் உடல் அமைப்புகளும் செயல்படத் தொடங்குகின்றன. இத்தொகுப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் கரு மற்றும் சிசுவின் காலம் கருத்தரித்தது முதல் உள்ள காலத்தைக் குறிக்கிறது.

மனித உடல் வளர்ச்சி நிலை வாரம் வாரியாக கீழே குறிப்பிடப்பட்டுள்ளது

தொகு
  • கருத்தரித்த 24-லிருந்து 30 மணி நேரத்துக்குள், ஸைகோட்டின் முதல் செல் பிளவு முடிகிறது.
  • மைட்டாஸிஸ் என்ற இந்த செய்கையின் மூலம், ஒரு செல் இரண்டாக, இரண்டு நான்காக பெருகுகிறது.
  • ஒரு வாரத்திற்குள், உள்ளடங்கிய பிண்டத்தின் செல்கள் இரண்டு அடுக்குகளை உருவாக்குகின்றன. அவை ஹைப்போபிளாஸ்ட் மற்றும் எப்பிபிளாஸ்ட் எனப்படும். ஹைப்பொபிளாஸ்ட் கரு உறையையும், எப்பிபிளாஸ்டின் செல்கள் ஆம்னியான் என்ற சவ்வை உருவாக்குகின்றன.
  • ஏறத்தாழ 2 ½ வாரங்களில், எப்பிபிளாஸ்ட் 3 பிரத்யேக சவ்வுகளை அல்லது செல் அடுக்குகளை உருவாக்குகிறது. இவை எக்ட்டோடர்ம், எண்டோடர்ம், மற்றும் மீஸோடர்ம் எனப்படும்.
  • 3 வாரங்களில் மூளை 3 முக்கிய பகுதிகளாகப் பிரிகிறது. இவை முன்பகுதி, நடுப்பகுதி, மற்றும் பின்பகுதி ஆகும். இதயத் துடிப்பு கருவுற்ற 3 வாரங்கள் மற்றும் 1 நாளில் தொடங்குகிறது.
  • 3 முதல் 4 வாரங்களுக்குள், உடல் அமைப்பு உருவாகி மூளை, முதுகுத் தண்டு, மற்றும் கருவின் இதயம் ஆகியவை கரு உறையை ஒட்டி காணப்படுகின்றன.
  • 4 முதல் 5 வாரங்களுக்குள், மூளை வேகமாக வளர்ந்து. மூளையின் அரைக்கோளம் தோன்றி, அது மூளையின் பெரும்பகுதியாக மாறுகிறது.
  • 5 வாரங்களில் நிரந்தரமான சிறுநீரகங்கள் தோன்றுகின்றன.
  • 5 ½ வாரங்களில் குருத்தெலும்பு உருவாகத் தொடங்குகிறது.
  • 6 வாரங்களில் மூளையின் அரைகோளங்கள் மூளையின் மற்ற பகுதிகளை விட வேகமாக வளர்கின்றன.
  • 7 வாரங்களில் கால் அசைவுகள் தோன்றுகின்றன.
  • 7 ½ வாரங்களில் கண்ணின் வண்ண விழித்திரை உண்டாகிறது. கண் இமைகள் வேகமாக வளர்கின்றன.
  • 8 வாரங்களில் மூளை வெகுவாக வளர்ச்சி அடைந்து, கருவின் மொத்த உடல் எடையில் பாதியாக வளர்ச்சியடைகிறது.
  • 9 முதல் 10 வாரங்களுக்குள் நிகழும் திடீர் வளர்ச்சி உடல் எடையை 75%-க்கும் மேல் அதிகரிக்கச் செய்கிறது.
  • 11 முதல் 12 வாரங்களுக்குள், சிசுவின் எடை ஏறத்தாழ 60% அதிகரிக்கிறது.
  • 12 வாரங்கள் கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்கள், அல்லது முப்பருவம் முடிவடைந்ததைக் குறிக்கிறது.
  • 20 வாரங்களில் காக்லியா எனப்படும் கேள்வி உறுப்பு, முழு வளர்ச்சி அளவை அடைகிறது.
  • 24 வாரங்களில் கண் இமைகள் திறப்பதால் சிசுவானது கண் சிமிட்டும் எதிர்வினை புரிகிறது.
  • 28 வாரங்களில் சிசு ஒலியின் ஏற்றத்தாழ்வுகளை இனம் பிரித்தறிகிறது.
  • 30 வாரங்களில் ஒரு சராசரி சிசுவின் சுவாசம் 30 முதல் 40% நேரம் நடைபெறுகிறது.
  • ஏறத்தாழ 32 வாரங்களில், ஆல்வியோலை, அல்லது காற்று செல்கள், நிரையீரலில் உருவாகத் தொடங்குகின்றன.
  • 36 வாரங்களில் சிசு பிரசவத்தைத் தொடங்குகிறது.

[3]

மேற்கோள்கள்

தொகு
  1. Sherk, Stephanie Dionne. "Prenatal Development". Gale Encyclopedia of Children's Health, 2006. Gale. Archived from the original on 1 December 2013. பார்க்கப்பட்ட நாள் 6 October 2013.
  2. "germinal stage". Mosby's Medical Dictionary, 8th edition. Elsevier. பார்க்கப்பட்ட நாள் 6 October 2013.
  3. "The Biology of Prenatal Development". பார்க்கப்பட்ட நாள் 19 மே 2018.