மனேக் தலால்
மும்பையைச் சேர்ந்த வணிகர்கள் (1918-2017)
மானெக் அர்தேசிர் சொராப் தலால் (Maneck Dalal) (24 டிசம்பர் 1918 - 6 மார்ச் 2017) டாடா ஏர்லைன்சு மற்றும் ஏர் இந்தியாவின் ஆரம்ப நாட்களில் மேலாளராக இருந்தவர். இலண்டனில் உள்ள இந்திய உயர் ஆணையரகத்தில் சிவில் விமானப் போக்குவரத்து இணைப்பாளராகவும் பார்சி இனத்தவராகவும் இருந்தவர். 1977 ஆம் ஆண்டு ஏர் இந்தியாவிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, இங்கிலாந்தில் உள்ள டாடா லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரானார். இலண்டனில் உள்ள பாரதிய வித்தியா பவன் தலைவராக இருந்தார். [1] [2] [3] [4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "About us | Heritage | Pioneers". Tata.com. 2008-08-10. பார்க்கப்பட்ட நாள் 2017-04-27.
- ↑ "At hand to receive Maharaja's Princess". www.telegraphindia.com. Archived from the original on 2017-04-27.
- ↑ "Patrons & Executives". Bhavan.net. பார்க்கப்பட்ட நாள் 2017-04-27.
- ↑ "Importance of people is only realised after they are dead: Maneck Dalal". Msn.com. 2015-03-18. பார்க்கப்பட்ட நாள் 2017-04-27.