மனோஜ் குமார்
மனோஜ் குமார் அல்லது(ஹரிகிருஷ்ணன் கிரி கோசுவாமி) 24 சூலை 1937 – 4 ஏப்பிரல் 2025) இந்தித் திரைப்படங்களில் பணியாற்றிய இந்திய நடிகர், திரைப்பட இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர், பாடலாசிரியர், திரைக்கதை ஆசிரியர் ஆவார். இந்தியத் திரைப்படத்துறையில் இவர் மிகவும் வெற்றிபெற்ற, மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவராக இருந்தார். தேசபக்தித் திரைப்படங்களைத் தயாரித்து நடிப்பவராக அறியப்பட்டார், மேலும் இவருக்கு 'பாரத் குமார்' என்ற புனைபெயர் வழங்கப்பட்டது.[upper-alpha 1]
மனோஜ் குமார் | |
---|---|
![]() 2007-இல் மனோஜ் குமார் | |
பிறப்பு | ஹரிகிருஷ்ணன் கிரி கோசுவாமி 24 சூலை 1937 ஆப்டாபாத், வடமேற்கு எல்லை மாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்போதைய- கைபர் பக்துன்வா மாகாணம், பாக்கித்தான்) |
இறப்பு | 4 ஏப்ரல் 2025 மும்பை, மகாராட்டிரம், இந்தியா | (அகவை 87)
தேசியம் | இந்தியர் |
மற்ற பெயர்கள் | பாரத் குமார் |
பணி |
|
செயற்பாட்டுக் காலம் | 1957–1999 |
உயரம் | 6 அடி 1 அங் (1.85 m) |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
வாழ்க்கைத் துணை | சாசி கோசுவாமி |
பிள்ளைகள் | குணால் கோசுவாமி உட்பட இரண்டு பிள்ளைகள் |
உறவினர்கள் | மணீஷ் ஆர். கோசுவாமி (தம்பி) |
புகழ்ப்பட்டம் |
|
இந்தியத் திரைப்படத்துறையில் இவரின் பங்களிப்புகளுக்காக, இந்திய அரசு 1992-இல் பத்மசிறீ விருதும், 2015-இல் தாதாசாகெப் பால்கே விருதும் வழங்கி கௌரவித்தது. மனோஜ் தேசிய திரைப்பட விருதும், ஏழு தடவை பிலிம்பேர் விருதும் பெற்றவர்.
ஆரம்பகால வாழ்க்கை
தொகுமனோஜ் குமார் பஞ்சாபி இந்து பிராமணர்[1] குடும்பத்தில் பிரித்தானிய இந்தியா, வடமேற்கு எல்லையிலுள்ள ஆப்டாபாத் என்ற நகரில் பிறந்தார்.[2] மனோஜின் இயற்பெயர் ஹரிகிருஷ்ணன் கிரி கோசுவாமி.[3]
பெற்ற விருதுகள்
தொகு- சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது
- பத்மஸ்ரீ விருது
- பால்கே ரத்னா விருது
- வாழ் நாள் சாதனையாளர் விருது
மேற்கோள்கள்
தொகு- ↑ "10 interesting facts about Manoj Kumar - Times of India". https://timesofindia.indiatimes.com/entertainment/hindi/bollywood/news/10-interesting-facts-about-manoj-kumar/articleshow/21302138.cms.
- ↑ Verghis, Shana Maria (8 May 2011). "'I left behind a can of marbles in Abbotabad after Partition'" இம் மூலத்தில் இருந்து 10 May 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110510015406/http://dailypioneer.com/336876/%E2%80%98I-left-behind-a-can-of-marbles-in-Abbotabad-after-Partition%E2%80%99.html.
- ↑ Vijayakar, Rajiv. "A patriot at heart". DHNS இம் மூலத்தில் இருந்து 18 August 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160818003910/http://www.deccanherald.com/content/487441/a-patriot-heart.html.
வெளி இணைப்புகள்
தொகு- Manoj Kumar: Bollywood's Own Mr Bharat
- Manoj Kumar : Profile, Gallery, Photos, Videos, News
- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் மனோஜ் குமார்
பிழை காட்டு: <ref>
tags exist for a group named "upper-alpha", but no corresponding <references group="upper-alpha"/>
tag was found