மனோன்மணி அம்மையார்
மனோன்மணி அம்மையார் அல்லது சென்னைப் பண்டிதை (1868 - 1909) என்றும் அழைக்கப்பட்ட இவர் பெண்பாற் கவிஞர் மற்றும் மருத்துவர் ஆவர். மருத்துவ துறையிலும், இலக்கிய துறையிலும் பல சாதனை படைத்த இவரை "ஆயுர்வேத ரத்நாகரம்" என்று பட்டத்துடன் மக்கள் அழைப்பார்கள்.[1][2][3] [4]
பிறப்பு
தொகுமனோன்மணி அம்மையார் 1868 ஆம் ஆண்டு அப்போதைய பிரித்தானியாவின் இந்தியப் பேரரசில் சென்னை மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்த குன்றத்தூரை அடுத்த மண்ணிவாக்கம் கிராமத்தில் செங்குந்தர் கைக்கோள முதலியார் மரபில் முருகேச முதலியார் - அலர்மேலு அம்மையாருக்கும் மகளாகப் பிறந்தார்.[5][6][7]
வாழ்க்கை
தொகுமனோன்மணி அம்மையாரரின் தந்தை மருத்துவ நூல்களை நான்குப் படித்தறிந்து மருத்துவ அறிவு பெற்றவர் ஆவர். வேறு சில மருத்துவர் உதவியுடன் சில மருந்து வகைகளைச் செய்வதிலும் நோய்களுக்குரிய காரணங்களைக் கண்டறிவதிலும் அனுபவம் உள்ளவர். அம்மையாரின் வீட்டில் சிறு நூல் நிலையம் ஒன்றை அமைத்ததோடு, சிறிய மருத்துவ நிலையத்தையும்.
மனோன்மணி அம்மையார்க்கு தனது வீட்டின் அருகில் இருந்த பள்ளியில் தொடக்கநிலைப் பள்ளியில் சேர்ந்து கல்வி கற்றார். அம்மையார் தனது தந்தையாரிடம் இருந்து அந்தாதி, கலம்பகம், பிள்ளைத்தமிழ், பெரியபுராணம், திருவிளையாடற் புராணம் போன்ற முக்கிய தமிழ் நூல்களை படித்து கற்றுக்கொண்டார்.
பிறகு அம்மையார் மருத்துவத் துறையிலும் அவர் தந்தையாரிடம் சிறு வயது முதல் பயிற்சிபெற்று வந்தார்.
மருத்துவம் கற்றப் பிறகு சைவத் திருமுறைகளைத் தாமாகவே படித்து அதன் அர்த்தங்களை புரிந்துக்கொண்டார்.
அம்மையாரின் பதினெட்டு வயதில் இவரைப் போன்ற மருத்துவரை திருமணம் செய்து கொண்டார்.
திருமணமாகி ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, அம்மையாருக்கு 25 வயது இருக்கும்போது கணவர் நோய்வாய்ப்பட்டு இறந்தார்.
பிறகு தஞ்சாவூர் சுப்பிரமணியப் பண்டிதர் எனும் மருத்துவரிடம் நான்கு ஆண்டுகள் மருத்துவப் பயிற்சி பெற்றார்.
முழுமையான மருத்துவம் கற்ற பின்பு சிறப்பாகப் பெண்கள் மருத்துவத்திலும், குழந்தைகள் மருத்துவத்திலும், கொண்டித்தோப்பு எனும் பகுதியில், தம் இல்லத்தில் மருத்துவத் தொழிலை அம்மையார் செய்து வந்தார்.
தமிழ் மொழியின் மீதும், மருத்துவத் துறையிலும் ஆர்வம் கொண்ட இவர் பல மருத்துவ நூல்களும் தமிழ் நூல்களை எழுதியுள்ளார்.[8][9]
இயற்றிய நூல்கள்
தொகு- கட்டளைக் கலித்துறை (திருச்சி, திருஆனைக்கா அகிலாண்ட நாயகி அம்மனைப் போற்றி பாடிய 102 பாக்கள்)
- அந்தாதித் தொடை (சிவபெருமானின் பெருமைகள், கொடியிடை நாயகியின் சிறப்புகள் பற்றிய நூல்)
- பழநிப் பாமாலை
- பழநி யிரங்கல் விருத்தப் பதிகம்
- பழநி வெண்பாப்
பதிகம்
- திருவாமாத்தூர் அழகியநாதர் பஞ்சரத்தினம்
- சென்னைக்
கந்தசுவாமிப் பதிகம்
- திருவானைக்கா அகிலாண்டநாயகி அந்தாதி
- திருமுல்லைவாயில் கொடியிடை நாயகி அந்தாதி
- திருமயிலைக் கற்பகவல்லி
அந்தாதி
- திருக்கழுக்குன்றத் திரிபுரசுந்தரி மாலை
- பழநிச் சன்னிதி முறை
- பழநிச் சிங்காரமாலை
- பழனிச் சிங்காரப் பதிகம்
- பூவைச் சிங்காரச்
சதகம்
- குன்றத்தூர் பொன்னியம்மன் பதிகம்
- புதுவைக் காமாட்சியம்மன்
பதிகம்
- ஒருவளென்னும் சொல்லின் மேலெழுந்த வினாக்களும் விடைகளும்
- மனோன்மணீயம்(அரிய மருத்துவ நூல்)[10]
சிறப்புகள்
தொகு"அணி கொண்ட காவை அகிலாண்ட நாயகிக்கு அன்பு செய்யும் பணி கொண்ட பாவை மனோன்மணி' என்று தண்டபாணி சுவாமிகள் இக்கவிஞரைப் போற்றியுள்ளார்.
பல மருத்துவ அறிஞர்களும், தமிழ்ப் புலவர்களும் ஒன்று மனோன்மணி அம்மையாருக்கு, "ஆயுர்வேத ரத்நாகரம்' என்ற பட்டம் அளித்துள்ளனர். [11]
மறைவு
தொகு15 ஆண்டுகள் மருத்துவப் பணியிலும், தமிழ்ப் பணியிலும் சிறப்பாகச் செய்துவந்த மனோன்மணி அம்மையார் 1908ஆம் ஆண்டில் தனது 45ஆவது வயதில் காலமானார்.
வெளி இணைப்புகள்
தொகுபண்டிதை மனோன் மணியம் மையார் தமிழகமும் பெண் கல்வியும் - தமிழ்ப் புலவர் பெருமக்கள்
மேற்கோள்கள்
தொகு- ↑ ""மருத்துவர்' மனோன்மணி!". தினமணி. 04 october 2016. https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2018/oct/14/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-3019659.html.
- ↑ தமிழ் புலவர் வரிசை
- ↑ Peṇpāk kaḷañciyamContributorUtakai Pon̲n̲al̲akan̲PublisherMaṅkai Nūlakam, 1986
- ↑ தமிழ் மொழி
- ↑ தமிழ்ப் புலவர் வரிசை, பக்கம் 95
- ↑ ""மருத்துவர்' மனோன்மணி!". தினமணி. 04 october 2016. https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2018/oct/14/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-3019659.html.