மனோரஞ்சன் பக்தா

இந்திய அரசியல்வாதி

மனோரஞ்சன் பக்தா (Manoranjan Bhakta) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார்.[1] 1939 ஆம் ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் தலைவராக இருந்தார். முதன்முதலில் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் பாராளுமன்ற உறுப்பினராக 1977 ஆம் ஆண்டில் 6 ஆவது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். மொத்தத்தில், இவர் இந்த தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக எட்டு முறை பணியாற்றினார். அதில் ஏழு முறை 1977-1999 வரை இவரது பணிக்காலம் தொடர்ச்சியாக இருந்தது.[2] 2010 ஆம் ஆண்டில் தேர்தலில் நிற்க அனுமதி மறுக்கப்பட்டதால், காங்கிரசு கட்சியிலிருந்து விலகி திரிணாமுல் காங்கிரசு கட்சியில் சேர்ந்தார்.

மனோரஞ்சன் பக்தா
Manoranjan Bhakta
மனோரஞ்சன் பக்தா
இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்
அந்தமான் நிக்கோபார் தீவுகள்
பதவியில்
1977-1999,2004-2009
முன்னையவர்கே.ஆர். கணேசு
பின்னவர்பிசுணு பதா ரே
தொகுதிஅந்தமான் நிக்கோபார் தீவுகள்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1939-04-10)10 ஏப்ரல் 1939
சர்மான்சி, பரிசால் மாவட்டம், வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
இறப்பு12 சூன் 2015(2015-06-12) (அகவை 76)
உப்பு ஏரி நகரம், கொல்கத்தா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்சாந்தி பக்தா
பிள்ளைகள்அனிதா மண்டல், சுனிதா தார்
வாழிடம்அந்தமான் நிக்கோபார் தீவுகள்
As of 16 சூன், 2015
மூலம்: [1]

இவர் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் எம்.ஏ பட்டமும் சட்டப்படிப்பும் படித்துள்ளார்.[3] தொழிலில் விவசாயியாகவும், அரசியல் மற்றும் சமூக சேவகராகவும் வாழ்ந்தார்.[3] 1961-71 ஆம் ஆண்டுகள் வரை திக்லிபூர் கிராம பஞ்சாயத்தின் பிரதானாக தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார்.

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் வழக்கறிஞரும் பத்திரிகையாளருமான அனிதா மண்டல் மனோரஞ்சனின் மகளாவார். அனிதா மண்டல் 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரசு வேட்பாளராக அந்தமான் நிக்கோபார் தீவுகள் தொகுதியில் போட்டியிட்டார், அங்கு அவர் 2,283 வாக்குகளைப் பெற்று நான்காவது இடத்தைப் பிடித்தார்.[4] பிதான்நகர் நகராட்சியில் திரிணாமுல் காங்கிரசு கட்சியின் கவுன்சிலராகவும் அனிதா இருந்தார்.[5]

  1. "Lok Sabha veterans with a difference". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 23 April 2004. பார்க்கப்பட்ட நாள் 12 December 2020.
  2. "Biographical Sketch - Member of Parliament - XII Lok Sabha". Indian Parliament website. பார்க்கப்பட்ட நாள் 27 March 2010.
  3. 3.0 3.1 "Biographical Sketch of Member of 12th Lok Sabha". loksabhaph.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2020-04-16.
  4. "Constituencywise-All Candidates". ECI. Archived from the original on 2014-05-17. பார்க்கப்பட்ட நாள் 2023-09-06.
  5. "Bidhannagar Municipality". Bidhannagar Municipality. பார்க்கப்பட்ட நாள் 30 May 2014.

மேற்கோள்கள்

தொகு

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மனோரஞ்சன்_பக்தா&oldid=4109389" இலிருந்து மீள்விக்கப்பட்டது