மன்சூர் அசன் கான்

இந்திய இருதயநோய் நிபுணர்

மன்சூர் அசன் கான் (Mansoor Hasan Khan) என்பவர் ஓர் இந்திய இருதயநோய் நிபுணராவார். உத்திரபிரதேச மாநிலம் லக்னோவில் அமைந்துள்ள கிங் சியார்ச்சு மருத்துவப் பல்கலைக்கழகத்தில் லாரி இருதயவியல் மையத்தை அமைப்பதில் இவர் முக்கிய பங்காற்றினார்.[1][2][3] 2011 ஆம் ஆண்டு இந்திய அரசின் நான்காவது உயர் குடிமகன் விருதான பத்மசிறீ விருதை இந்திய அரசு இவருக்கு வழங்கி கௌரவித்தது.[4][5]

மன்சூர் அசன்
Mansoor Hasan
பிறப்பு1938
அலிகார், உத்தரப்பிரதேசம், இந்தியா
பணிஇதயநோய் நிபுணர்
பெற்றோர்அச்மல் அசன் கான்
விருதுகள்பத்மசிறீ
இந்திய மருத்துவக் கழகத்தின் கௌரளவ சான்றிதழ்

வாழ்க்கை தொகு

மன்சூர் இந்தியாவின் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அலிகார் மாவட்டத்தில் 1938 ஆம் ஆண்டில் பதான் குடும்பத்தில் பிறந்தார்.[2] இப்பதான் இனத்தவர் 17 ஆம் நூற்றாண்டில் ஆப்கானிய மலைகளிலிருந்து குடிபெயர்ந்து வந்தனர்.[1] மன்சூரின் தந்தையான அசுமல் அசன் கான் ஒரு மருத்துவ பயிற்சியாளராவார். மன்சூரின் தந்தையான அசுமல் அசன் கான் ஒரு மருத்துவ பயிற்சியாளராவார். மேலும் இவரது தாத்தா அப்துல் மசித் குவாசா சாமியா மில்லியா இசுலாமியா என்ற பல்கலைக் கழகத்தை நிறுவினார். மன்சூரின் தாயார் போபால் நகர நவாப்களின் குடும்பத்திலிருந்து வந்தவர் ஆவார்[1][2] மன்சூர் தனது ஆரம்பப் பள்ளிப்படிப்பை அலிகாரில் பயின்றார். பின்பு அங்குள்ள அரசு கல்லூரியில் இடைநிலை தேர்வை முடித்தார். [2] தன்னுடைய பட்டப் படிப்பை மன்சூர் லண்டனில் முடித்தார். எடின்பரோவிலுள்ள ராயல் மருத்துவ கல்லூரியில் உயர் கல்வி பயின்றார். 1964 ஆம் ஆண்டில் இங்குதான் இவர் கதிரியக்கத்தில் பட்டம் பெற்றார்.[1]

எங்களது மூதாதையர் பானினி ஆவார்.
நாங்கள் இசுலாத்தை ஏற்றுக்கொள்வதற்கு
முன்பு நாங்கள் அனைவரும்
சிவனை வழிபடும்
இந்துக்கள் அல்லது பௌத்தர்களாக இருந்தோம்.
மகா பெரியவரான பானினி தற்போது
சுலைமான் மலைகள் என்றழைக்கப்படும்
மும்மலைகளில் தியானம்
செய்து சிவபெருமானின் தரிசனம் பெற்றார்.
அதன்பிறகே அவர் சமசுகிருத
இலக்கண விதிகளைத் தொகுத்தார்”

என்று மன்சூர் அசன் கூறுகிறார்

மன்சூரின் தொழில் வாழ்க்கை 1962 ஆம் ஆண்டில் கிங் சியார்ச்சு மருத்துவ பல்கலைக்கழகத்தில் தொடங்கியது. கிங் மருத்துவ மனையில் 1996 ஆம் ஆண்டில் இருதயவியல் துறையின் தலைவராக ஆரம்பித்து ஓய்வு பெறும் வரை அங்கு கற்பித்தார்.[2] மருத்துவ பணியிடையே சிறிது காலம் லண்டனில் இருதயவியல் தொடர்பான சிறப்புப் பயிற்சியும் பெற்றார்.[1][2] ஓய்வுக்குப் பிறகு லக்னோவின் அமைந்துள்ள சகாரா மருத்துவமனையில் பணிபுரிந்தார்.[6] இந்திய இருதய சங்கத்தின் முன்னாள் தலைவர் மற்றும் இந்திய இராணுவ படைகள், லண்டன் குரோம்வெல் மருத்துவமனை, புது தில்லியின் எசுகார்ட்சு மருத்துவமனை போன்ற பல்வேறு மருத்துவ மனைகளில் ஆலோசகர் பொருப்புகளில் இருந்தார்.[2] மேலும்அலிகர் முசுலீம் பல்கலைக்கழகம், சாமியா மில்லியா இசுலாமியா, கான்பூர் பல்கலைக்கழகம் மற்றும் லக்னோ பல்கலைக்கழங்களின் நிர்வாக சபைகளில் ஓர் உறுப்பினராக மன்சூர் இருந்தார்.[2] தேசிய மற்றும் சர்வதேச பத்திரிகைகளில் 50 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். மேலும் 30 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட மருத்துவ முதுகலை மாணவர்களுக்கு வழிகாட்டியுள்ளார். [2] லக்னோ இந்திய மருத்துவ சங்கம், இவருக்கு மரியாதை சான்றிதழ் வழங்கியது. [2] 2011 ஆம் ஆண்டு இந்திய அரசின் நான்காவது உயர் குடிமகன் விருதான பத்ம சிறீ விருதை இந்திய அரசு மருத்துவத் துறையில் சிறந்த பங்களிப்புகளுக்காக மன்சூருக்கு வழங்கப்பட்டது.[4][2][2]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "Milligazette". Milligazette. 7 April 2011. Archived from the original on 1 ஜூலை 2011. பார்க்கப்பட்ட நாள் 24 November 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. 2.00 2.01 2.02 2.03 2.04 2.05 2.06 2.07 2.08 2.09 2.10 2.11 "Lucknow Society". Lucknow Society. 2014. பார்க்கப்பட்ட நாள் 24 November 2014.
  3. "Two Circles". Two Circles. 2014. பார்க்கப்பட்ட நாள் 24 November 2014.
  4. 4.0 4.1 "Padma Shri" (PDF). Padma Shri. 2014. Archived from the original (PDF) on 15 November 2014. பார்க்கப்பட்ட நாள் 11 November 2014.
  5. "Tribune". Tribune. 1 January 2008. பார்க்கப்பட்ட நாள் 24 November 2014.
  6. "TOI". TOI. 27 January 2011. பார்க்கப்பட்ட நாள் 24 November 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மன்சூர்_அசன்_கான்&oldid=3566899" இலிருந்து மீள்விக்கப்பட்டது