மன்டூல் கான்
மன்டூல் கான் என்பவர் வடக்கு யுவான் அரசமரபின் ஓர் ஆட்சியாளர் ஆவார். இவர் 1475 - 1478இல் ஆட்சி புரிந்தார். இவர் தைசுன் கானின் ஒன்றுவிட்ட தம்பி ஆவார்.
ஆரம்ப வாழ்க்கை
தொகுஇவரது அண்ணன் மகன் மோலோன் கானின் இறப்பிற்குப் பிறகு கான் பதவியானது கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்திற்கு மங்கோலிய பழங்குடியினங்கள் ஒருவருடன் ஒருவர் அதிகாரத்திற்காகச் சண்டையிட்டுக் கொண்டிருந்தால் வெற்றிடமாக இருந்தது. மன்டூல் கான் உங்கே கபர் தூ என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். இவர் துர்பான் நகரத்தை அடிப்படையாகக் கொண்ட பெக் அர்ஸ்லானின் மகள் ஆவார். இவர்களது திருமணம் 1463 மற்றும் 1465க்கு இடையில் நடை பெற்றது. இருவரும் ஒருவரை ஒருவர் வெறுத்தனர்.[1] இவர்களது திருமணம் குழந்தைகளைத் தரவில்லை.[1] 1464இல் இவர் மந்துகையையும் திருமணம் செய்து கொண்டார். மந்துகை அந்நேரத்தில் வெறும் 16 வயதே ஆனவராக இருந்தார்.[1] 1475 வரை மன்டூல் கானுக்குக் கான் பட்டம் சூட்டப்படவில்லை. 10,000 மக்களைக் கொண்ட சகர் அரசுக்குத் தலைமை தாங்கிய ஆரம்ப கால மங்கோலியத் தலைவர் மன்டூல் கான் தான் என்று அறியப்படுகிறது.[2]
ஆட்சி
தொகுஇவரது குறுகிய கால ஆட்சியின் போது கானின் சக்தியை வெற்றிகரமாக வலிமையாக்கினார். உயர்குடியினரின் சக்தியைக் குறைத்தார். இவரது தத்து மகன் தயன் கான் (படு மோங்கே) இவருக்குப் பிறகு ஆட்சிக்கு வர தயன் கான் வழி வகுத்தார். ஏனெனில், மன்டூல் கானுக்கு நேரடி ஆண் வாரிசு இல்லை. பெரும்பாலான நூல்கள் இவருக்குக் குழந்தைகளே இல்லை என்று குறிப்பிடுகின்றன.[3]
உசாத்துணை
தொகு- ↑ 1.0 1.1 1.2 Weatherford, Jack (2010). The secret history of the Mongol queens : how the daughters of Genghis Khan rescued his empire (1st ed.). New York: Crown Publishers. pp. 155–156. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780307407153. இணையக் கணினி நூலக மைய எண் 354817523.
- ↑ Uradyn Erden Bulag-Nationalism and hybridity in Mongolia, p. 73.
- ↑ Weatherford 2010, ப. 159.