மன்மோகன் கலியா
இந்திய அரசியல்வாதி
மன்மோகன் கலியா (Manmohan Kalia) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதி ஆவார். இவர் பஞ்சாப் மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக அரசியலில் செயல்பட்டார். 1967, 1969, 1977 மற்றும் 1986 ஆகிய ஆண்டுகளில் ஜலந்தர் தொகுதியில் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். பஞ்சாப் மாநிலத்தில் சட்டமன்ற உறுப்பினராக செயல்பட்டார். 1967 மற்றும் 1970 ஆம் ஆண்டுகளில் இந்தியாவின் பஞ்சாப் அரசாங்கத்தில் ஓர் அமைச்சராகப் பணியாற்றினார். 19 மாதங்கள் அவசரகாலச் சிறையில் இருந்தார். 1986 ஆம் ஆண்டு மன்மோகன் கலியா சாலை விபத்தில் உயிரிழந்தார்.[1]