மன்மோகன் சிங் லிபரான்
மன்மோகன் சிங் லிபரான் (Manmohan Singh Liberhan)(பிறப்பு 11 நவம்பர் 1938) என்பவர் இந்தியாவின் ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி ஆவார். இவர் பாபர் மசூதி இடிப்பு தொடர்பான அறிக்கையைத் தயாரித்த லிபரான் ஆணையத்திற்கு 17 ஆண்டுகள் தலைமை தாங்கினார்.
கல்வி
தொகுபுகழ்பெற்ற வழக்கறிஞரான மறைந்த சௌதரி பக்தவார் சிங்கின் மகனான மன்மோகன் சிங் லிபரான், 1938ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி சண்டிகரில் உள்ள ஓர் கிராமத்தில் பிறந்தார். அம்பாலா மற்றும் சண்டிகரில் படித்த பின்னர், அக்டோபர் 10, 1962 அன்று வழக்கறிஞராகப் பதிவு செய்து அம்பாலா மாவட்ட நீதிமன்றத்தில் வழக்காடத் தொடங்கினார். அம்பாலாவில் சொத்து, வருவாய், குற்றவியல் மற்றும் தொழிலாளர் சட்டம் குறித்து பயிற்சி பெற்ற பின்னர், 1964-ல் பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.[1] தற்பொழுது பணி ஒய்விற்கு பின்னர், இந்தியாவின் சண்டிகரில் வசித்து வருகிறார்.
நீதிபதி பணி
தொகுலிபரான் வட இந்திய மாநிலமான அரியானாவின் தலைமை வழக்கறிஞராக இருந்தார். பின்னர் பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்றார். லிபரான், அயோத்தி பாபர் மசூதி இடிப்பு விசாரணை ஆணையத்தின் தலைவராக அப்போதைய பிரதமர் பி. வி. நரசிம்ம ராவினால் நியமிக்கப்பட்டார். இந்த ஆணையத்தின் கருத்தின்படி, அயோத்தியில் திசம்பர் 6, 1992-ல் நடந்த நிகழ்வு "தன்னிச்சையாகத் திட்டமிடப்படாமல்” நடந்தது என்பதாகும்.[2]
லிபரான், சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக மாற்றப்பட்டார். சிறிது காலத்திற்குப் பிறகு, இவர் ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார். வயது மூப்பின் காரணமாக இங்கிருந்து இவர் பணி ஓய்வு பெற்றார். பணி ஓய்விற்குபின்னரும், 2009ஆம் ஆண்டு வரை லிபரான் ஆணையத்தின் தலைவராகத் தனது பதவியைத் தொடர்ந்தார்.
மேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "MSLJ". tshc.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2021-11-27.
- ↑ NDTV correspondent (23 November 2009). "What is the Liberhan Commission?". NDTV India இம் மூலத்தில் இருந்து 26 நவம்பர் 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20091126182026/http://www.ndtv.com/news/india/all_about_the_liberhan_commission.php. பார்த்த நாள்: 29 September 2010.NDTV correspondent (23 November 2009). . NDTV India. Archived from the original on 26 November 2009. Retrieved 29 September 2010.
வெளி இணைப்புகள்
தொகு- ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்ற இணையதளத்தில் சுயவிவரம்
- லிபரான் அயோத்தி விசாரணை ஆணையத்தின் அறிக்கை - முழு உரை PDF வடிவத்தில் (126 MB)
- மாற்று இணைப்பு - முழு உரை PDF வடிவத்தில் (126 MB)[தொடர்பிழந்த இணைப்பு][ <span title="Dead link tagged June 2017">நிரந்தர இறந்த இணைப்பு</span> ]