மபு டான்டுலர் அருங்காட்சியகம்

இந்தோனேசிய அருங்காட்சயகம்

மபு டான்டுலர் அருங்காட்சியகம் (Mpu Tantular Museum), இந்தோனேஷியாவின் ஒரு பிரதேசமான கிழக்கு ஜாவாவில் சிடோராஜாவில் புடுரான் என்ற இடத்தில் அமைந்துள்ள ஒரு அருங்காட்சியகம் ஆகும். முன்னர் இது ஸ்டெடெலிஜ்க் ஹிஸ்டோரிச் மியூசியம் சோராபாயா என்று இருந்தது.

மபு டான்டுலர் அருங்காட்சியகம்
Museum Mpu Tantular
கிழக்கு ஜாவா மாகாணத்தின் மாநில அருங்காட்சியகம்
Map
நிறுவப்பட்டது25 சூலை 1937
அமைவிடம்ஜலான் ராயா புதுரான், கிழக்கு ஜாவா , இந்தோனேசியா
ஆள்கூற்று7°26′02″S 112°43′12″E / 7.433982°S 112.719922°E / -7.433982; 112.719922
வகைஇனவியல் அருங்காட்சியகம்
சேகரிப்பு அளவுகிழக்கு ஜாவாவின் கலைப்பொருள்கள்
உரிமையாளர்கிழக்கு ஜாவா அரசாங்கம்

சங்கம்

தொகு

ஆரம்பத்தில் இந்த அருங்காட்சியகம் ஒரு சங்கமாக 1933 ஆம் ஆண்டில் காட்ஃபிரைட் ஹரியோவால்ட் வான் பேபர் என்பவரால் நிறுவப்பட்டது. தற்போது மபு டான்டுலர் அருங்காட்சியகம் கிழக்கு ஜாவா மாகாணத்தின் மாநில அருங்காட்சியகமாக உள்ளது. [1]

வரலாறு

தொகு

1933 ஆம் ஆண்டில் ஜெர்மனியில் பிறந்த சூரபயன், காட்ஃபிரைட் ஹரியோவால்ட் வான் பேபர் என்றழைக்கப்படுபவரால் ஸ்டெடெலிஜ்க் ஹிஸ்டோரிச் மியூசியம் சோராபாயா என்று அழைக்கப்படுவது ஒரு சங்கமாக ஆரம்பிக்கப்பட்டது. மப்பு டான்டுலர் அருங்காட்சியகத்தின் ஆரம்ப கால வரலாறு இவ்வாறு தொடங்குகின்றது. 1922 ஆம் ஆண்டு சுரபயாவில் தான் இருந்தபோது அமைந்த வாழ்க்கையின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை வான் பேபர் சேகரிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அது அவருக்கு ஒரு பொழுதுபோக்காகவே இருந்தது. [2] வான் பேபர் தனது அருங்காட்சியகத்தை முதலில் சுரபயாவின் டவுன் ஹாலில் நிறுவினார். அவரது அருங்காட்சியகம் முதலில் சூலை 25, 1937 ஆம் நாளன்று காலனித்துவ அரசாங்கத்தால் திறந்து வைக்கப்பட்டது [1] பின்னர் அருங்காட்சியகம் ஒரு கட்டிடத்துக்கு வந்தது சுரபயாவில் ஜாலான் தாமான் . [3] மயங்காரா 6 என்ற கட்டடத்திற்கு இடம் மாற்றம் பெற்றது. ஜலான் சிம்பாங் 3 (தற்போது ஜலான் பெமுடா 3 சுரபாயா) என்ற இடத்தில், அருங்காட்சியகத்தை விரிவுபடுத்துவதற்கான முயற்சி புதிய கட்டிடத்தை வாங்குவதன் மூலம் நிறைவேற்றப்பட்டது. விரிவாக்கத்திற்குப் பிறகு, அந்த அருங்காட்சியகத்தில் ஒரு கண்காட்சி அறை, ஒரு நூலகம், ஒரு அருங்காட்சியக அலுவலகம் மற்றும் ஒரு ஆடிட்டோரியம் ஆகியவை அமைந்தன. [1] இந்த அருங்காட்சியகம் மியூசியம் வான் பேபர் என்றும் அழைக்கப்பட்டது

ஜப்பானிய ஆக்கிரமிப்பின்போது, அருங்காட்சியகம் ஒன்பது மாதங்களுக்கு மூடப்பட்டு இருந்தது. செப்டம்பர் 30, 1955 ஆம் நாளன்று வான் பேபர் இறந்தபோது, அருங்காட்சியகத்தின் நிர்வாகம் யாரும் கவனிக்காத நிலையில் புறக்கணிக்கப்பட்டது. அங்கு சேகரிப்பில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த பல பொருள்கள் சேதமடைந்தன அல்லது கொள்ளையடிக்கப்பட்டன. பின்னர் இந்த அருங்காட்சியகத்தை யயாசன் பெண்டிடிகன் உம் டான் கெபுடயான் என்பவர் நிர்வகித்து நடத்தினார். 1964 ஆம் ஆண்டில் அருங்காட்சியகத்தில் பராமரிப்புப் பணிக்காக பேராசிரியர் டாக்டர் எம். சூட்டோபோ சிறிது தொகையை நன்கொடையாக வழங்கினார்.

தேசிய கல்வி மற்றும் பண்பாட்டுத்துறையில் அருங்காட்சியக இயக்குநரகம் அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து தேசிய அரசாங்கம் அருங்காட்சியகத்தின் நிர்வாகத்தில் இன்னும் தீவிரமாக கவனம் செலுத்த ஆரம்பித்தது. மே 23, 1972 ஆம நாளன்று, அருங்காட்சியகம் ஜாவா திமூர் ("கிழக்கு ஜாவா அருங்காட்சியகம்") என்ற புதிய பெயரில் திறந்து வைக்கப்பட்டது. [3] அருங்காட்சியகம் உத்தியோகபூர்வமாக திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, கிழக்கு ஜாவா மாகாண அரசாங்கத்திடம் அருங்காட்சியகத்தை ஒப்படைக்க ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. பிப்ரவரி 13, 1974 ஆம் நாளன்று, கிழக்கு ஜாவா அருங்காட்சியகத்தைமாகாணத்தைச் சேர்ந்த "மாநில அருங்காட்சியகம்" என நிர்ணயிக்கும் புதிய விதிமுறை வெளியிடப்பட்டது. கிழக்கு ஜாவாவின் மாநில அருங்காட்சியகமாக இந்த அருங்காட்சியம் நவம்பர் 1, 1974 ஆம் நாளன்று திறந்துவைக்கப்பட்டது. [1] [4]

இட மாற்றம்

தொகு

1975 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில், அருங்காட்சியகம் ஜாலான் தாமான் மயாங்கரா 6, சுராபயா என்ற இடத்திற்கு இடம் மாற்றப்பட்டது புதிய இடம் 1977 ஆகஸ்ட் 12 ஆம் நாளன்று கிழக்கு ஜாவா ஆளுநர் சுனந்தர் பிரியோசுதர்மோ அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. மே 14, 2004 ஆம் நாளன்று, சிடார்ஜோவின் ஜலன் ராயா புதுரன் என்ற இடத்திற்கு அருங்காட்சியகம் மீண்டும் மாற்றப்பட்டது. [1] [3]

குறிப்புகள்

தொகு