சுராபாயா

இந்தோனேசியாவின் கிழக்குச் சாவக மாகாணத்திலுள்ள ஒரு நகரம்

சுராபாயா (Surabaya, முன்னதாக சொராபாயா, சோரெபாயா அல்லது சுராபயா) இந்தோனேசியாவின் இரண்டாவது பெரிய நகரமாகும். இதன் மக்கள் தொகை 3.1 மில்லியனாகும். பெருநகரப் பகுதியில் இதன் மக்கள் தொகை 5.6 மில்லியனாக உள்ளது. இது கிழக்கு சாவக மாநிலத்தின் தலைநகரமாக விளங்குகின்றது. கிழக்கு சாவகத் தீவின் வடக்கு கடற்கரையோரமாக மாசு ஆற்றின் முகத்துவாரத்தில் மதுரா நீரிணையின் ஓரத்தில் அமைந்துள்ளது.

சுராபாயா
சுரோபோயோ
நகரம்
இடது மேலிருந்து, வலச்சுற்றாக: சுராபாயா உயிரியல் பூங்காவில் சுரா, பாயா சிலைகள், சுராமடு பாலம், நாயகர்களின் நினைவகம், துஞ்சங்கன் பிளாசா.
இடது மேலிருந்து, வலச்சுற்றாக: சுராபாயா உயிரியல் பூங்காவில் சுரா, பாயா சிலைகள், சுராமடு பாலம், நாயகர்களின் நினைவகம், துஞ்சங்கன் பிளாசா.
அலுவல் சின்னம் சுராபாயா
சின்னம்
அடைபெயர்(கள்): நாயகர்களின் நகரம்
குறிக்கோளுரை: மினுக்கும் சுரபயா
கிழக்குச் சாவகத்தில் சுராபாயாவின் அமைவிடம்
கிழக்குச் சாவகத்தில் சுராபாயாவின் அமைவிடம்
நாடுஇந்தோனேசியா
மாநிலம்கிழக்கு சாவகம்
குடியேற்றம்மே 31, 1293
அரசு
 • மேயர்திரி ரிசுமாகரினி
 • உதவி மேயர்விசுனு சக்தி புயனா
பரப்பளவு
 • நகரம்374.78 km2 (144.70 sq mi)
 • Metro1,805.08 km2 (696.95 sq mi)
ஏற்றம்5 m (16 ft)
மக்கள்தொகை (2012 [1])
 • நகரம்3,114,700
 • அடர்த்தி8,300/km2 (22,000/sq mi)
 • பெருநகர்5,622,259
 • பெருநகர் அடர்த்தி3,100/km2 (8,100/sq mi)
நேர வலயம்WIB (ஒசநே+7)
தொலைபேசி குறியீடு+62 31
License plateL
இணையதளம்surabaya.go.id

இந்தோனேசிய தேசியப் புரட்சியின் போது இந்தோனேசிய விடுதலைக்கு இந்தோனேசிய நாட்டிலும் பன்னாட்டளவிலும் ஆதரவு கிட்ட சுராபாயாச் சண்டை பெரிதும் காரணமாக இருந்தது; இதனால் சில இந்தோனேசியர்கள் இந்த நகரத்தை "நாயகர்களின் நகரம்" என அழைக்கின்றனர். இங்கு தான் இந்தோனேசியாவின் முதல் அரசுத்தலைவர் சுகர்ணோ பிறந்தார்.

பெயர்க் காரணம்தொகு

 
சண்டையிடும் சுறாவும் முதலையும், குடியேற்றவாதக் காலத்திலிருந்து சுராபாயா நகரின் சின்னமாக விளங்குகின்றது; இது உள்ளூர் நாட்டார் கதையை ஒட்டி எழுந்துள்ளது

சுராபாயா என்ற பெயர் உள்ளூர் வழக்கில் "சுரா" அல்லது "சுரோ" (சுறா), "பாயா" அல்லது "பொயோ" (முதலை) என்ற சொற்களிலிருந்து உருவானது. இந்தப் பகுதியின் இவ்விரு உயிரினங்களும் "மிக வலிமையான, செல்வாக்குள்ள விலங்கு" என்ற பட்டத்திற்காக ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டுக் கொண்டதாக நாட்டார் வழக்கு உள்ளது. இறுதியில் இரண்டும் அமைதி உடன்பாடு கண்டு தங்கள் எல்லைகளை வரையறுத்துக் கொண்டன. சுறாவின் ஆட்பகுதி கடலாகவும் முதலையின் ஆட்பகுதி நிலப்பகுதியாகவும் பிரிக்கப்பட்டன. இருப்பினும், ஒருநாள் சுறா ஆற்று கழிமுகத்தில் தேடலுக்காக வந்தது; இதனால் கோபமுற்ற முதலை, ஆறு நிலப்பகுதியில் நீள்தொலைவு செல்வதால் ஆற்றுப்பகுதி தனக்குரியதாக வழக்காடியது. இதனால் மீண்டும் சண்டை மூண்டது. இறுதியில் சுறா தோல்வியுற்றுக் கடலுக்கே திரும்பியது; அன்றுமுதல் முதலை தற்போதைய நகரம் அமைந்துள்ள ஆற்றுக் கழிமுகப் பகுதியில் ஆட்சி புரிகின்றது.[2]

மேற்சான்றுகள்தொகு

  1. "Dinas Kependudukan dan Catatan Sipil Kota Surabaya". Dispendukcapil.surabaya.go.id. 2013-03-04 அன்று பார்க்கப்பட்டது.
  2. Irwan Rouf & Shenia Ananda (in Indonesian). Rangkuman 100 Cerita Rakyat Indonesia dari Sabang sampai Merauke: Asal Usul Nama Kota Surabaya. MediaKita. பக். 60. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9786029003826. http://books.google.co.id/books?id=cPJqcwuSOUkC&pg=PA64&dq=#v=onepage&q&f=false. பார்த்த நாள்: 17 November 2014. 

வெளி இணைப்புகள்தொகு

விக்கிமீடியா பொதுவகத்தில்,
சுரபயா
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுராபாயா&oldid=1974107" இருந்து மீள்விக்கப்பட்டது