மதுரா நீரிணை

மதுரா நீரிணை என்பது இந்தோனேசியாவின் சாவகத் தீவையும் மதுரா தீவையும் பிரிக்கும் நீர்ப் பரப்பைக் குறிக்கும். இந்த நீரிணையிலேயே இந்தோனேசியத் தீவுகளான கம்பிங் தீவு, கிலிராஜா தீவு, கெந்தெங் தீவு, கெத்தாப்பாங் தீவு என்பன அமைந்துள்ளன.

மதுரா நீரிணையிற் பயணிக்கும் பாதை

இந்த நீரிணைக்கு மேலாகவே இந்தோனேசியாவின் மிகப் பெரிய பாலமான சுராமாடு பாலம் அமைந்துள்ளது. அப்பாலம் சாவகத் தீவில் அமைந்துள்ள சுராபாயாவையும் மதுரா தீவின் பங்காலான் பெரும் பகுதியையும் இணைக்கிறது.[1]

மேற்கோள்கள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=மதுரா_நீரிணை&oldid=1366321" இலிருந்து மீள்விக்கப்பட்டது