மம்தா தாஸ் அல்லது மம்தா டேஷ் ( Mamata Dash பிறப்பு 4 அக்டோபர் 1947) ஓர் ஒடிய கவிஞர், எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் ஆவார். இவர் இந்தியாவின் ஒடிசாவைச் சேர்ந்தவர். [2] இவரது கவிதைத் தொகுப்பான ஏகாத்ரா சந்திரசூர்யாவுக்கு ஒடிய மொழிக்கான சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது.

மம்தா தாஸ்
பிறப்புமம்தா மோஹபத்ரா [1]
4 அக்டோபர் 1947 (1947-10-04) (அகவை 76)
ஜகத்சிங்பூர்
தேசியம்இந்தியன்
கல்விஇளங்கலை
கல்வி நிலையம்உத்கல் பல்கலைக்கழகம்
குறிப்பிடத்தக்க படைப்புகள்அன்யா ஜகதாரா சகலா, அபக் ஸ்வர்கா, உஜ்வாலா உபபானா
குறிப்பிடத்தக்க விருதுகள்ஒடிய சாகித்ய அகாடமி விருது, கங்காதர ராத் அறக்கட்டளையின் பானுஜி ராவ் விருது
பிள்ளைகள்2 மகள்கள்

சுயசரிதை தொகு

மம்தா அக்டோபர் 4, 1947 அன்று ஜகத்சிங்பூரில் பிறந்தார். இவரது தந்தை ராமச்சந்திர மொஹாபத்ரா ஒரு மருத்துவர் ஆவார். இவரது தாயின் பெயர் பங்கஜ்மாலா. அவருக்கு 4 சகோதரிகள் மற்றும் 3 சகோதரர்கள் இருந்தனர். கட்டாக்கின் ராவன்ஷா பெண்கள் பள்ளிக்குச் செல்வதற்கு முன்பு ஜகத்சிங்பூரில் தனது ஆரம்பக் கல்வியைப் பெற்றார். இவர் தனது ஒன்பது வயதில் கவிதைகள் எழுதத் தொடங்கினார். இவரது சில கவிதைகள் குழந்தைகளின் மாத இதழான மீனாபஜரில் வெளியிடப்பட்டன. [3] துணைவரின் பெயர் டாக்டர் ரகுநாத் டாஷ்

படைப்புகள் தொகு

அங்கீகாரம் தொகு

  • ஒடிய சாகித்ய அகாடமி விருது, 1987 [1]
  • கங்காதர ராத் அறக்கட்டளையின் பானுஜி ராவ் விருது [2]
  • ஒடிசாவின் சம்பல்பூர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பாரத நாயக் ஸ்மிருதி சம்மனா

சான்றுகள் தொகு

  1. 1.0 1.1 Dutt, K.C.; Sahitya Akademi (1999). Who's who of Indian Writers, 1999: A-M. Who's who of Indian Writers, 1999. Sahitya Akademi. பக். 290. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-260-0873-5. https://books.google.com/books?id=QA1V7sICaIwC&pg=PA290. 
  2. 2.0 2.1 "Mamta Dash". Authorspress. Archived from the original on 2020-04-26. பார்க்கப்பட்ட நாள் 2021-02-27."Mamta Dash". Authorspress. Archived from the original on 2020-04-26. Retrieved 2021-02-27.
  3. "Newage Media & Publications Pvt. Ltd". E-paper. 2019-11-24. Archived from the original on 2020-04-26. பார்க்கப்பட்ட நாள் 2020-04-24.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மம்தா_தாஸ்&oldid=3779809" இலிருந்து மீள்விக்கப்பட்டது