மம்தா ராய்
மம்தா ராய் (Mamata Roy) என்பவர் இந்திய அங்கன்வாடி பணியாளர் மற்றும் மேற்கு வங்க சட்டமன்றத்தின் முன்னாள் உறுப்பினர் ஆவார்.[1] இவர் 2011 முதல் 2016 வரை, துப்குரி சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார். ராய் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) உறுப்பினர் ஆவார்.[1][2]
மம்தா ராய் | |
---|---|
சட்டமன்ற உறுப்பினர் மேற்கு வங்காளம் | |
பதவியில் 2011–2016 | |
முன்னையவர் | லட்சுமி காந்த ராய் |
பின்னவர் | மித்தாலி ராய் |
தொகுதி | துப்புகுரி |
தலைவர்-துப்புகுரி நகராட்சி | |
பதவியில் 2007–2011 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
அரசியல் கட்சி | இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) |
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுமேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரி மாவட்டத்தில் உள்ள துப்குரி நகரில் வசிப்பவர் மம்தா ராய்.[1] இவர் பைரதிகுரி உயர்நிலைப் பள்ளியில் தனது பள்ளிக் கல்வியைப் பெற்றார். இங்கு இவர் 1992-ல் தேர்ச்சி பெற்றார். பின்னர் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுச் சேவை ஊழியரானார்.[2] ராய் தன்னை ஒரு பொதுவுடைவாதியாக அடையாளப்படுத்துகிறார்.[3]
அரசியல் வாழ்க்கை
தொகுதுப்குரி நகராட்சிக்கான 2007 தேர்தலில், ராய் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) வேட்பாளராகப் போட்டியிட்டு, பகுதி எண் 7ல் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4]
2011 மேற்கு வங்க சட்டப் பேரவைத் தேர்தலுக்கு முன், துப்குரி தொகுதியிலிருந்து இரண்டு முறை பதவி வகித்த சட்டமன்ற உறுப்பினர் லட்சுமி காந்தா ராய்க்கு பொதுவுடைமை கட்சி மறுவேட்புமனுவை மறுத்தது. இதற்குப் பதிலாக ராயை கட்சி வேட்பாளராகப் போட்டியிடப் பரிந்துரைத்தது.[5] இத்தேர்தலில் போட்டியிட்ட ராய், திரிணாமுல் காங்கிரசின் மாவட்டத் தலைவரின் மனைவியான மினா பர்மனை எதிர்த்து வெற்றி பெற்றார்.[5][6] Roy won the election polling at 42.25% of the votes cast in her favor against 39.82% of the votes cast in favor of Barman.[6]
2016 மேற்கு வங்க சட்டப் பேரவைத் தேர்தலில், முந்தைய தேர்தலில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்ட திரிணாமுல் காங்கிரசு வேட்பாளர் மிதாலி ராயிடம்[7] மீண்டும் போட்டியிட்ட ராய் தோல்வியடைந்தார்.[6]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "Mamata Roy 2011". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2020-11-20.
- ↑ 2.0 2.1 "Mamata Roy 2016". myneta.info. Association for Democratic Reforms. பார்க்கப்பட்ட நாள் 2020-11-20.
- ↑ Chatterjee, Tanmay (2020-09-04). "Prashant Kishor's team asks select Left leaders to join TMC. This followed". Hindustan Times (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-20.
- ↑ "Contesting Cand. for Munc" (PDF). wbsec.gov.in. Election Commission of India.
- ↑ 5.0 5.1 Giri, Pramod (2020-11-19). "No Chhath puja at two main water bodies in Kolkata, rule Supreme Court, Calcutta HC". Hindustan Times (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-20.
- ↑ 6.0 6.1 6.2 "West Bengal 2011". Election Commission of India.
- ↑ "West Bengal General Legislative Election 2016". Election Commission of India.