மயிலன் குளம் வேளைக்காரர் கல்வெட்டு

மயிலன் குளம் வேளைக்காரர் கல்வெட்டு, இலங்கையின் திருகோணமலை மாவட்டத்தில், திரியாய்ப் பகுதியில் மயிலன் குளம் என்னும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு தமிழ்க் கல்வெட்டு ஆகும். கற்றூண் ஒன்றில் 15 வரிகளில் இக்கல்வெட்டு எழுதப்பட்டுள்ளது. 1980ல் இக்கல்வெட்டுப்பற்றி அறியவந்தபோது, பேராதனைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த செ. குணசிங்கம் அதை வாசித்து வெளியிட்டார்.[1]

காலம்

தொகு

இக்கல்வெட்டில் காணும் "சிறீ அபைய சலாமேகச் சக்கரவர்த்திகள் சிறீ ஜயபாகு தேவர்க்கு யாண்டு பதினெட்டாவது ..." என்னும் தொடர்மூலம் இது, சிறீ ஜயபாகு என்னும் அரசனின் 18 ஆவது ஆட்சியாண்டில் எழுதப்பட்டது என்பது தெளிவு. தமையனான முதலாம் விஜயபாகு இறந்தபின் ஜயபாகு 1010ம் ஆண்டில் அரசனாக முடிசூட்டிக்கொண்டான். எனவே அவனது 18 ஆவது ஆண்டு என்பது 1028 ஆம் ஆண்டு ஆகும். ஆனால், குறுகிய காலத்திலேயே விஜயபாகுவின் மகன் விக்கிரமபாகு இவனைத் துரத்திவிட்டு ஆட்சியைக் கைப்பற்றிக்கொண்டான் என்பதால் குறித்த ஆண்டில் விக்கிரமபாகுவே அரசனாக இருந்தான். ஆனால், இவன் முடிசூடாமல் அரசாண்டான் என்றும் அதனால், கல்வெட்டுக்கள் தொடர்ந்தும் ஜயபாகுவின் ஆட்சியாண்டைக் குறித்தே வெளியிடப்பட்டன என்றும் கருதப்படுகிறது.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. பத்மநாதன், செ., 2006. பக். 251, 252.
  2. பத்மநாதன், செ., 2006. பக். 252.

உசாத்துணைகள்

தொகு
  • பத்மநாதன், சி., இலங்கைத் தமிழ்ச் சாசனங்கள், கலாச்சார அலுவல்கள் திணைக்களம், கொழும்பு, 2006.

இவற்றையும் பார்க்கவும்

தொகு