மயிலாப்பூர் மல்லீசுவரர் கோயில்
மல்லீசுவரர் கோயில் இந்திய மாநிலம் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் மயிலாப்பூரில் அமைந்துள்ள சிவன் கோவில் ஆகும். மயிலாப்பூரில் உள்ள சப்த சிவத்தலங்களில் இதுவும் ஒன்றாகும்.
மயிலாப்பூர் மல்லீசுவரர் கோயில், சென்னை | |
---|---|
பெயர் | |
பெயர்: | மயிலாப்பூர் மல்லீசுவரர் கோயில், சென்னை |
அமைவிடம் | |
ஊர்: | மயிலாப்பூர் |
மாவட்டம்: | சென்னை |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | மல்லீசுவரர் |
தாயார்: | மரகதாம்பிகை |
சப்த சிவத்தலங்கள்
தொகுமயிலாப்பூர் பகுதியில் மயிலாப்பூர் காரணீசுவரர் கோயில், திருவல்லிக்கேணி தீர்த்தபாலீசுவரர் கோயில், மயிலாப்பூர் வெள்ளீசுவரர் கோயில், மயிலாப்பூர் விருபாட்சீசுவரர் கோயில், மயிலாப்பூர் வாலீசுவரர் கோயில், மயிலாப்பூர் மல்லீசுவரர் கோயில். மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில் எனப்படுகின்ற சப்த சிவத்தலங்கள் அமைந்துள்ளன. இவற்றை ஒரே நாளில் மூன்று மணி நேரத்தில் தரிசிக்கலாம் என்பர். இவை ஒன்றுக்கொன்று அருகாமையில் அமைந்துள்ளன. [1] இவற்றைச் சப்த ரிசிகளான விசுவாமித்திரர், காசிபர், வசிஷ்டர், கௌதமர், அகத்தியர், அத்ரி, பிருகு ஆகியோர் வழிபட்டுள்ளனர்.[2]
இறைவனும் இறைவியும்
தொகுஇங்குள்ள மூலவர் மல்லீசுவரர் ஆவார். இறைவி மரகதாம்பிகை ஆவார். [3] இப்பகுதியில் மல்லிகை மலர்ச்செடிகள் அதிகம் இருப்பதால் மூலவர் மல்லீசுவரர் என்றழைக்கப்படுகிறார். [4]
திறந்திருக்கும் நேரம்
தொகுஇக்கோயில் காரணீசுவரர் கோயிலுக்குப் பின்புறத்தில் உள்ளது. காலை 6.00 மணி முதல் பகல் 11.30 மணி வரையிலும் மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் இக்கோயில் திறந்திருக்கும். [3]
மேற்கோள்கள்
தொகு- ↑ தீபம் இதழ் - சப்த சிவ தலங்கள் - மே 20 2016 -பக்கம் 32
- ↑ தீபம் இதழ் மே 20 2016 -பக்கம் 42
- ↑ 3.0 3.1 ஆரூர் சுந்தரசேகர், பெருமை மிக்க மயிலாப்பூரில் சப்த சிவஸ்தலங்கள், விகடகவி, 16 மே 2020
- ↑ அஸ்ட்ரோ சுந்தரராஜன், நவக்கிரக தோஷம் ஒரே நாளில் நீங்கணுமா? மயிலாப்பூருக்கு வாங்க!, தினமணி, 2 மார்ச் 2019