மயிலை சீனி.கோவிந்தராசன்

மயிலை சீனி கோவிந்தராசன் ஒரு தமிழறிஞராவார். திருக்குறள் கருத்துகளை மக்களிடத்து எளிய நடையில் அறிமுகப்படுத்தியவர். இவர் எழுதிய நூல்களில் மயிலை நான்மணிமாலை, திருக்குறள் காமத்துப்பால் நாடகம் இரண்டும் குறிப்பிடத்தக்கவை.[1]

பிறப்பும் கல்வியும்

தொகு

சென்னை மயிலாப்பூரில் சீனிவாச நாயக்கருக்கும் தாயாரம்மாளுக்கும் மகனாக 1881 இல் பிறந்தார். இவரது இளைய சகோதரர் மயிலை சீனி வேங்கடசாமி. இவர் சாந்தோம் கல்லூரியில் தமிழும் ஆங்கிலமும் பயின்றார். மயிலை மகாவித்துவான் சண்முகம்பிள்ளையிடம் தமிழ் பயின்றுள்ளார்.

படைப்புப் பணிகள்

தொகு

கலாசிந்தாமணி எனும் திங்கள் இதழில், முல்லைக்கொடி""இளவேனில் பத்து முதலான பல ஆய்வுக் கட்டுரைகள் எழுதியுள்ளார். செந்தமிழ்ச் செல்வி எனும் இதழில், பிரேமதாசர், காரியசித்தி, கண்ணீற்றுச் சொற்கள், தொகைநூல் முதலான கட்டுரைகளும் எழுதியுள்ளார். மயிலை நான்மணிமாலை எனும் நூலையும் படைத்துள்ளார். இவரது,திருக்குறள் நாடகம் எனும் நூல் சிறப்புடையதாகும். அந்நூலின் முதலிரண்டு பதிப்புகளை க. மாணிக்கவேல் முதலியாரும், மூன்றாவது பதிப்பை ஸ்டார் பிரசுரமும் வெளியிட்டுள்ளது. இந்நூல் கோவை இலக்கியம் போன்று எளிய நடையினை உடையது. திருக்குறள்-காமத்துப்பால் கருத்துக்களை நாடக வடிவில் தந்த முதல்நூல் இதுவாகும். இவரது திருக்குறள் நாடகநூற் சிறப்புகளைக் கா. சு. பிள்ளை, மு. இராகவையங்கார், கா.நமச்சிவாய முதலியார், அறிஞர் மணி முதலானோர் நூல் மதிப்புரையில் பாராட்டியுள்ளார்கள்.

மறைவு

தொகு

இவர் தமது 37 ஆவது வயதில் 1918 ஆம் ஆண்டு மறைந்தார்.

மேற்கோள்கள்

தொகு

உசாத்துணை

தொகு
  • க.அ.இராமசாமிப் புலவர்,"தமிழ்ப் புலவர் வரிசை" (நூல்-11) சீனி.கோவிந்தராசனார் கட்டுரை-பக்கம்-135.
    • மேலது நூல் -பக்கம் -136
  • சீனி.கோவிந்தராசன், 'திருக்குறள் நாடகம்' நூலின் மு.இராகவையங்காரின் மதிப்புரை -பக்கம் -11,12.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மயிலை_சீனி.கோவிந்தராசன்&oldid=3729992" இலிருந்து மீள்விக்கப்பட்டது