மயில் சிலந்தி

மயில் சிலந்தி
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
Spider
குடும்பம்:
Salticidae
துணைக்குடும்பம்:
பேரினம்:
Maratus

Karsch, 1878
மாதிரி இனம்
Maratus amabilis
Karsch, 1878
உயிரியற் பல்வகைமை
43 species
வேறு பெயர்கள்

Lycidas

மயில் சிலந்தி (peacock spider) என்பது ஒரு சிலந்தி வகையாகும். தாவும் சிலந்தி வகையில் மயில் சிலந்தியும் ஒன்று. மராடஸ் வோலன்ஸ் (Maratus volans) என்ற இனத்தை சார்ந்தது இவ்வகை சிலந்திகள். சிலந்தி வகைகளில் மிகவும் அழகான சிலந்தி மயில் சிலந்தி. இதன் அழகான நடனமே இதற்கு காரணப் பெயராக அமைந்தது.[1] நீலம் சிவப்பு மஞ்சள் பச்சை போன்ற நிறங்களை உடையது சிலந்தியின் முதுகுப் பகுதி. இனச் சேர்க்கைக்கு முன்பாக பெண் சிலந்தியை உடன்படச் செய்வதற்காக ஆண் சிலந்தி வயிற்றுப் பகுதியை உயர்த்தி தனது மூன்று ஜோடிக் கால்களையும் (கிரிக்கெட் மைதானத்தில் பார்வையாளர்களைக் குதூகலிக்க செய்ய ஆடும் பெண்கள் கைகளை உயர்த்தி கை தட்டி ஆடுவது போல) உயர்த்தி ஆடத் தொடங்கும். சில நேரங்களில் Bravo நடனமும் ஆடி அசத்த முயற்சி செய்யும். பெண் சிலந்திகளில் இந்த நிறங்கள் மிகவும் வெளிறிக் காணப்படும்.

ஆண் சிலந்தியின் ஆட்டம் பிடிக்காமல் போனாலோ அல்லது பெண் சிலந்தி ஏற்கனவே கருவுற்று சினையாக இருந்தாலோ பெண் சிலந்தி அதன் மேல் தாவிச் சென்று கொன்று தின்று விடும். திறமையான ஒருசில ஆண் சிலந்திகள் வேகமாகத் தாவி தப்பித்து விடும். பெரும்பாலான நேரங்களில் சாவை சந்திக்க நேரிடும். சிறப்பாக ஆடி சேர்க்கைக்கு உடன்பட்ட பிறகு கூட கொன்று தின்றுவிடும் சிலந்திகளும் இந்த வகையில் உண்டு (Thornhill, 1984). பொதுவாக இந்த நடனம் ஐந்து நிமிடம் முதல் ஐம்பது நிமிடங்கள் வரை தொடரும். பெண் சிலந்தியானது தனது சந்ததியில் வரும் சிலந்திகள் மிகவும் அழகாகவும் ஆதிக்கம் மிக்கதாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புவதே ஆண் சிலந்திகளை அதிக நேரம் ஆடுவதைப் பார்த்து துன்புறுத்தக் காரணம் என்கின்றனர் பூச்சியியல் வல்லுநர்கள் ((Bergstrom, 2012). சேர்கைக்காக உயிரை மாய்த்துக் கொள்ள தயாராக உள்ள ஆண் பூச்சிகள் தனது சந்ததி தன்னோடு நின்று விடக் கூடாது என்பதற்காகவும் இருக்கலாம் எனும் கூற்றும் உண்டு. இந்த சிலந்திகளால் மனிதனுக்கு எந்தவித ஆபத்தும் இல்லை.

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புக்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மயில்_சிலந்தி&oldid=3185469" இலிருந்து மீள்விக்கப்பட்டது