மயில் வசீகரன்
மயில் வசீகரன் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | J. almana
|
இருசொற் பெயரீடு | |
Junonia almana (கரோலஸ் லின்னேயஸ், 1758) | |
வேறு பெயர்கள் [1] | |
|
மயில் வசீகரன் (Peacock Pansy -- Junonia almana) இந்தியா, இலங்கை, நேபாளம், பூட்டான், வங்காளதேசம், மியான்மார், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் பரவலாகக் காணப்படும் பட்டாம்பூச்சி வகையாகும். தரையை ஓட்டிப் பறக்கும் மயில் வசீகரன்களை இந்திய நிலப்பரப்பில் பொதுவாகக் காணலாம்.[2] ஆரஞ்சு நிற இறகுகளின் மேற்புறம் பழுப்புநிறப்பட்டையும் இறகுகளின் ஓரத்தில் பழுப்பு நிறக்கோடுகளும் காணப்படும். மயில் இறகுகளில் உள்ளதைப்போன்று இவற்றின் இறகுகளின் மத்தியில் அடர்பழுப்பு நிற வளையம் இருப்பதால் இவற்றுக்கான ஆங்கில பெயர் அமைந்ததாக கருதலாம்[சான்று தேவை].
கோடைக் காலத்தில் இதன் இறகுகளில் காணப்படும் புள்ளிகள் குறைந்தும், மழைக் காலத்தில் இறகுகளில் உள்ள கண் போன்ற புள்ளிகளும் வரிகளும் கூடுதலாகக் காணப்படும். இந்த வண்ணத்துப்பூச்சியின் புழுக்கள் பொதுவாக கனகாம்பரம், நீர்முள்ளி, பொடுதலை போன்ற தாவரங்களை உணவாகக் கொள்கின்றன.[3]
மேற்கோள்
தொகு- ↑ Charles Thomas Bingham (1905). "375. Junonia almana". Butterflies. Volume 1. The Fauna of British India, Including Ceylon and Burma. Taylor and Francis. pp. 361–362.
- ↑ காடு இதழ், தடாகம் வெளியீடு, 2016 மே-சூன், பக்: 37.
- ↑ ஆதி வள்ளியப்பன் (6 சனவரி 2018). "வசீகரனின் மயில் கண்கள்". கட்டுரை. தி இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 6 சனவரி 2018.