மயோட்டேவில் இசுலாம்

பிரான்சின் மயோட்டே தீவில் சமயம்

மயோட்டேவில் இசுலாம் (Islam in Mayotte) 97% இசுலாமிய மக்களால் பின்பற்றப்படுகிறது. 3% கிறித்தவர்களும் கொண்டுள்ள மாயோட்டே தீவில் வசிப்பவர்களில் பெரும்பான்மையினரின் நம்பிக்கை இசுலாம் ஆகும். [1] தீவின் மொத்த 90,000 மக்களில் 85,000 பேர் மகோரைசு இனக்குழுவைச் சேர்ந்தவர்கள் ஆவர். மகோரைசு இனக்குழுவினர் என்பவர்கள் பல பகுதிகளிலிருந்து குடியேறியவர்களின் கலவையாகும்: பிரதானமாக ஆப்பிரிக்கர்கள், அரேபியர்கள் மற்றும் மலகாசிகள் இதில் இடம்பெறுகின்றனர். மாயோட்டேவில் இசுலாமியர்களின் இருப்பு குறைந்தது 15 ஆம் நூற்றாண்டில் இருந்து தொடர்ந்திருக்கலாம். [2]

சிங்கோனி பள்ளிவாசல்

இளைஞர்கள் மேற்கத்திய பாணி ஆடைகளை அணிந்தாலும், பெரியவர்களிடையே பாரம்பரிய ஆடைகள் இன்னும் பொதுவானவையாக உள்ளன. நகரத்தில் இருக்கும் போது, ஒரு மகோரைசு மனிதர் பொதுவாக வெள்ளை பருத்தி ஆடை மற்றும் நீளமான சட்டையை அணிகிறார். சில சமயங்களில் வெள்ளை சட்டையுடன் வெள்ளை குல்லா அணிகிறார். ஊருக்கு வெளியே செல்லும்போது நீண்ட துணி சரோன் (வண்ணமயமான நீளாடை) அணிந்து கொள்கிறார். பெரும்பாலான பெண்கள் பாரம்பரிய நிற சலூவா அல்லது மேலை நாட்டைச் சார்ந்த ஆடைகளை அணிகிறார்கள்.

பலதார மணம் என்பது மகோரைசு மக்கள் மத்தியில் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு நடைமுறையாகும். 2009 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 29 ஆம் தேதியன்று 95% மயோட்டே குடிமக்கள் பிரான்சின் 101 ஆவது துறையாக மாற விரும்பி வாக்களித்தனர். மார்ச் 2011 இல் வாக்கெடுப்பு நடைமுறைக்கு வந்ததால் குழந்தை திருமணங்கள் உட்பட பிரெஞ்சு கலாச்சாரத்திற்கு முரணான அனைத்து வகையான பலதார மணம் மற்றும் பிற வகையான நடைமுறைகளையும் தீவு தடை செய்தது. [3] தற்போது, பலதார மணங்கள் அரசால் நிறுத்தப்பட்டதாகக் கருதப்படுகிறது.

பாரம்பரியமாக, மகோரைசு மக்கள் எந்த விதமான மத மாற்றத்திற்கும் மிகவும் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். [4] மாயோட்டேவில் இசுலாத்தின் நடைமுறை சகிப்புத்தன்மை கொண்டது என்று விவரிக்கப்பட்டுள்ளது. [5]

மேற்கோள்கள் தொகு

  1. "Archived copy". Archived from the original on 2012-09-21. பார்க்கப்பட்ட நாள் 2011-05-15.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  2. Islamic Prayer Across the Indian Ocean: Inside and Outside the Mosque. https://books.google.com/books?id=RJmqGFX-2MAC&pg=PA64. 
  3. French island of Mayotte votes to change in status
  4. http://kcm.co.kr/bethany_eng/p_code/1386.html
  5. "Mayotte voit l'avenir en tricolore" (in fr). France Soir. 31 March 2011 இம் மூலத்தில் இருந்து 4 ஏப்ரல் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120404123929/http://www.francesoir.fr/actualite/societe/mayotte-voit-l-avenir-en-tricolore-87198.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மயோட்டேவில்_இசுலாம்&oldid=3590780" இலிருந்து மீள்விக்கப்பட்டது