மரக்கட்டைத் தாவரங்கள்
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
கெட்டிமரத் தாவரங்கள் (Woody plant) அல்லது மரக்கட்டைத் தாவரங்கள் பல்வேறு வகையான கட்டுமானப் பணிகளுக்கு பயன்படுத்தப்படும். பூக்கும் தாவரங்கள் மரக்கட்டையாகப் பயன்படுகின்றன.
தாவரத்தின் கருநிறமான மையப்பகுதி வன்கட்டை எனப்படும். தாவரத் தண்டின் மென்மையான வெளிப்பகுதி மென்கட்டை எனப்படும். மென்கட்டை அதன் பெயருக்கு ஏற்ப தாவரத்தில் நீாினைக் கடத்த உதவுகிறது. வன்கட்டை தாவரங்களுக்கு வலிமையையும், கடினத்தன்மையையும் மற்றும் உறுதியையும் அளிக்கிறது. வன்கட்டை மென்கட்டையை விட அதிக உறுதியானது. பூஞ்சைகள், கரையான்கள் மற்றும் துளையிடும் பூச்சிகள் வன்கட்டையை பெரும்பாலும் சிதைப்பதில்லை.
வன்கட்டையில் பிசின், அரக்கு, எண்ணெய் முதலியன காணப்படுவதால், வன்கட்டை கடினத்தன்மையையும், பூஞ்சைகளை எதிா்க்கும் தன்மையையும் பெற்றுள்ளது. வன்கட்டை பொதுவாக அதிக மெருகேறும் தன்மையுடையது. இது அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. பூஞ்சைகளும், கரையான்களும் மென்கட்டையை மிக அதிக அளவில் சிதைக்கின்றன.
கட்டையின் பயன்கள்
தொகு- காடுகளிலிருந்து கிடைக்கும் பயனுள்ள பொருள்களுள் மரக்கட்டை முதன்மையானது. இது வீடுகளிலும், தொழிற்சாலைகளிலும் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. அணைகள், வீடுகளின் கட்டுமானப் பணிக்கு மரக்கட்டை பொிதும் பயன்படுகிறது.
- நல்ல தரம்வாய்ந்த கட்டைகள் மரச்சாமான்கள் செய்வதற்கும், மரத்தாலான அழகுப் பொருட்கள் செய்வதற்கும் பயன்படுகின்றன.தேக்கு, சந்தனம், ரோஸ்கட்டை மகோகனி,வால்நெட் போன்ற கட்டைகள் மரச்சாமான்கள் செய்வதற்கு பயன்படுகின்றன.
- மாட்டு வண்டிகள், இரயில் பெட்டிகள், பாரம் ஏற்றிச் செல்லும் நான்கு சக்கர ஊர்திகள், பேருந்துகள், சரக்குந்துகள் ஆகியவற்றின் கட்டுமானப் பணிக்கு பல்வேறு மரவகைகள் பயன்படுகின்றன.
- கப்பல், படகு மற்றும் கட்டுமரம் ஆகியவை வடிவமைப்பதற்கு கடினமான, நீா் உறிஞ்சாத மரக்கட்டைகள் பயன்படுத்தப்படுகின்றன.
- வலிமையான உறுதியான மரக்கட்டைகள் தொடருந்து தண்டவாள குறுக்குக் கட்டைகளாக பயன்படுத்தப்படுகின்றன.
- பல்வேறு வகையான விளையாட்டுப் பொருட்கள் தயாாிப்பதற்கு, மென்மையான, வலிமைமிகுந்த இலகுதன்மையுடைய கட்டைகள் பயன்படுத்தப்படுகின்றன.
- வில்லோ மரத்திலிருந்து கிாிக்கெட் மட்டைகள் தயாாிக்கப்படுகின்றன. மல்பொி மரத்திலிருந்து ஹாக்கி மட்டைகள், கிாிக்கெட் குறிக்கொம்பு முதலியன தயாாிக்கப்படுகின்றன.
- தற்பொழுது ஒட்டுப்பலகை தயாாிக்கும் தொழிற்சாலைகள் அதிக அளவில் உள்ளன. மென்மையான மரப்பட்டைகள் ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி இடைப்பட்ட பகுதியில் கோந்து தடவப்பட்டு ஒட்டப்படுகின்றன. கோந்து, மரப்பட்டைகள் இணைந்து, உருவாக்கப்பட்ட,மரப்பட்டைகளின் அடுக்கு ஒட்டுப்பலகை எனப்படும். இது பெரும்பாலும், வாசற்கதவுகள், குறுக்குச்சுவா்கள், தடுப்புப்பெட்டகங்கள், அலமாாிகள், மேசைகளின் மேற்பரப்பு ஆகியவைகளை தயாாிக்கப் பயன்படுகிறது.
- மென்மையான நிறமற்ற விலை குறைந்த கட்டைகள் தீப்பெட்டிகள் மற்றும் தீக்குச்சிகள் தயாாிக்கப் பயன்படுகிறது.
- எபிட்ரா என்னும் தாவரம் மருத்துவ சிறப்பு வாய்ந்தது. இதன் கட்டையிலிருந்து பிாித்தெடுக்கப்படும் எபிட்ரின் என்ற மருந்து ஈளைநோயைக் குணப்படுத்தப் பயன்படுகிறது.
உசாத்துணை
தொகு- ஏழாம் வகுப்பு அறிவியல் பாடநூல், தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம், சென்னை - 600 006.
- Hickey, M.; King, C. (2001). The Cambridge Illustrated Glossary of Botanical Terms. Cambridge University Press.
- "Global Forest Resources Assessment 2005/Food and Agriculture Organization of the United Nations" (PDF).
- Horst H. Nimz, Uwe Schmitt, Eckart Schwab, Otto Wittmann, Franz Wolf "Wood" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry 2005, Wiley-VCH, Weinheim. doi:10.1002/14356007.a28_305
- fossils show origins of wood". CBC.ca. August 12, 2011. Retrieved August 12, 2011.
- Woods, Sarah. "A History of Wood from the Stone Age to the 21st Century". EcoBUILDING. A Publication of The American Institute of Architects. Retrieved March 28, 2017.