மரண விறைப்பு (சட்டஞ்சார் மருத்துவம்)

சட்டம்சார் மருத்துவத்தில், மரண விறைப்பு (Death erection) எனப்படுவது இறப்பிற்குப் பின் ஏற்படும் ஆண்குறி விறைப்பு ஆகும். இது இறுதி விறைப்பு (terminal erection[1] எனவும் அழைக்கப்படும். பெரும்பாலும் இது தூக்கு தண்டனை தரப்பட்ட ஆண் பிணங்களில் காணப்பட்டுள்ளது[2].

காரணம்

தொகு

கயிற்று முடிச்சு சிறுமூளையில் (cerebellum) தரும் அழுத்தத்தால் இது உண்டாவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. ஆண்கள் மட்டுமின்றி பெண்களிலும் இது காணப்படுகிறது.

பிணத்தின் பிறப்புறப்பில் காணப்படும் மாற்றங்கள்

தொகு

ஆண்களில்

தொகு

சிறுநீர், கோழை, சுக்கில நீர் வெளித்தள்ளல் ஆகியவற்றுடன் கூடிய முழுவதுமான ஆண்குறி விறைப்பு காணப்படும்.

சட்டஞ்சார் மதிப்பு

தொகு

மரண விறைப்பு காணப்பட்டால் இறந்தவர் வன்முறையான மரணத்தை அடைந்துள்ளார் என ஊகித்து உணரலாம்.

இவற்றையும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Helen Singer Kaplan & Melvin Horwith (1983). The Evaluation of Sexual Disorders: Psychological and Medical Aspects. United Kingdom: Brunner Routledge. பார்க்கப்பட்ட நாள் 2007-01-26.) "Men subjected to capital punishment by hanging and laboratory animals sacrificed with cervical dislocation have terminal erections. The implication is that either central inhibition of erection is released and erection created or that a sudden massive spinal cord stimulus generates an erectile response. There is ample experimental and clinical evidence to support the former supposition."
  2. Willis Webster Grube (1897). A Compendium of practical medicine for the use of students and practitioners of medicine. Hadley Co. பார்க்கப்பட்ட நாள் 2007-01-26. "Erection has long been observed to follow injuries to the cerebellum and spinal cord. Out of eleven cases of cerebellar hemorrhage, erection of the penis was noted six times by Serres. Death by hanging is often accompanied by partial erection."