மரப்பாலம்

மரப்பாலம் என்பது இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்திருக்கும் சிறிய கிராமம். கிராமத்தின் நடுவே எ5, பிரதான வீதி ஊடறுக்கிறது. குளம், வயல், காடு, மலை என அனைத்து இயற்கை வளங்களும் நிறைந்த ஒரு கிராமம். ஏறாவூர் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கிராமசேவையாளர் பிரிவு 185 சி. இது மரப்பாலம், சின்னபுல்லுமலை, ராஜபுரம், மாவழியாறு, முல்லுசேனை ஆகிய நான்கு சிறு கிராமங்களை உள்ளடக்கியதாகும்.

கல்விதொகு

மரப்பாலம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை முதலாம் தரம் தொடக்கம் ஐந்தாம் தரம் வரை இயங்குகிறது.

தொழில்தொகு

இங்குள்ள மக்களில் பெரும்பாலானோர் வேளாண்மையையே தமது பிரதான தொழிலாக செய்கிறார்கள். சிலர் கால்நடை வளர்ப்ப்பிலும் ஈடுபடுகிறார்கள். கிட்டதட்ட 800 ஏக்கர் நிலத்தில் விவசாயம் பண்ணப்படுகிறது.

ஆலயம்தொகு

இங்குள்ள ஆலயத்தின் பெயர் ஸ்ரீ சித்தி வினாயகர் ஆலயம். பிரதான வீதியின் அருகே புளியமர நிழலில் ஆரம்பத்தில் சிறிதாக இருந்த விநாயகப்பெருமானை ஊர்மக்கள் சிறிய கோயிலாக கட்டி வழிபட்டு வந்தனர். பின்னர் 1871 ஆண்டு சிறிய குடியேற்ற கிராமமாக இருந்த இடம் நாளடைவில் அபிவிருத்தி அடையத் தொடங்கியது. 1992 ம் ஆண்டு ஆலயம் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. இங்கு ஆண்டுதோறும் திருவிழா கிராம மக்களால் நடத்தப்படுகிறது. இது தவிர கேதாரகொளரி விரதம், கந்தர் சட்டி விரதம், கார்த்திகை விளக்கீடு என்பனவும் மிகச்சிறப்பாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனுடய நிர்வாகமுறைமை இங்குள்ள மக்களால் தாங்களாகவே தீர்மானிக்கப்பட்டு வருகிறது.

மக்கள்தொகு

இங்குள்ள மக்கள் தங்கள் வாழ்க்கை முறையை மிகவும் எளிய முறையிலேயே நடத்துகிறார்கள். 1986 முதல் 2007 வரை ஈழப்போரால் பெரிதும் பாதிக்கப்பட்ட இவர்கள், தங்களுடைய வாழ்வாதரத்தை மீளக்கட்டி எழுப்ப பெரிதும் தங்களை வருத்தியிருக்கிரார்கள். இக்கிராமத்தில் இருந்து 1990க்கு பின்னர் வெளியேறியவர்கள் யாரும் திரும்ப வர மறுப்பதற்கு காரணமுண்டு. தகுந்த வசதி வாய்ப்புக்கள் இல்லாமையே இதற்கு முக்கிய காரணம், கிட்டத்தட்ட 85 குடும்பங்கள் வரை இன்று இங்கிருந்து இடம் பெயர்ந்து வெளி இடஙகளில் வாழ்கிறார்கள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மரப்பாலம்&oldid=2770497" இருந்து மீள்விக்கப்பட்டது