மரம் தங்கசாமி
மரம் தங்கசாமி (இறப்பு: 16. செப்டம்பர். 2018) என்பவர், தென்னிந்தியாவின், தமிழ்நாட்டின், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சூழலியர் ஆர்வளர் ஆவார். வானம் பார்த்த பூமிகளுள் ஒன்றான புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே உள்ள சேந்தன் காடு என்ற கிராமத்தில் இவர் பல ஆயிரம் மரங்களை நட்டு காடாக்கி வளர்த்தார்.
விவசாயியான இவர் ஒரு கட்டத்தில் வேளாண்மையில் இழப்புகளை சந்தித்து மனம் கலங்கி நின்றார். ஊரிலும் கடுமையான வறட்சி நிலவியது. சொத்தை விற்று, கடன்களை அடைத்து ஏதாவது வேலைக்கு சென்றுவிடலாமா என்று யோசித்தார். அந்த நிலையில், அகில இந்திய வானொலியில் தற்செயலாக மரப்பயிரும் பணப்பயிரே! என்கிற தலைப்பில் பேராசிரியர் ஒருவர் உரையாற்றினார். அதைக் கேட்டபிறகு சொத்தை விற்கும் முடிவினை கைவிட்டார். பின்னர் நூறு தேக்கு மரங்களை வாங்கி தனது நிலத்தில் நட்டார். இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, அவை வளர்ந்து தன்னையும் தனது குடும்பத்தையும் பாதுகாக்கும் என்பது அவரது நம்பிக்கை. ஒரே ஆண்டிலேயே தங்கசாமி நட்ட மரங்கள் இருபது அடி வளர்ந்து அவரை உற்சாகப்படுத்தியதால், உற்சாகத்தில் மேலும் நூறு மாங்கன்றுகளை நட்டார். அப்படியே நூறு முந்திரி, நூறு புளியங்கன்று என்று நட்டுக்கொண்டே சென்றார்.[1]
முள் மரங்கள் தொடங்கி சந்தன மரங்கள் வரை வகைப்படுத்த முடியாத அளவில் மரங்கள் நிறைய நட்டு வளர்த்துள்ளார். முதலில் தன் சொந்த நிலமான இருப்பந்தை ஏக்கர் நிலத்தில் மரங்களை நட்டு காடாக்கிய இவர், பின்னர் பள்ளிக்கூடம், அரசு அலுவலகம் போன்ற இடங்களிலும் நட்டுள்ளார்.[2] தற்போது அவருடைய காட்டில் தேக்கு, சந்தனம், மகோகனி, குமிழ் போன்ற 190 வகையான மரங்களும் 125 வகையான மூலிகைகளும் வளர்ந்து இருக்கின்றன.
விருதுகள்
தொகுஇவரது பணிகளைப் பாராட்டி 2008 ஆம் ஆண்டு தமிழக அரசு சுற்றுசூழல் துறை அறிஞர் அண்ணா விருதை வழங்கியது.[3]
குறிப்புகள்
தொகு- ↑ மர மனிதன் – மரம் தங்கசாமி, pannaiyar.com
- ↑ Correspondent, Vikatan. "'மாண்புமிகு' மரம் தங்கசாமி!". https://www.vikatan.com/. பார்க்கப்பட்ட நாள் 2022-09-12.
{{cite web}}
: External link in
(help)|website=
- ↑ "'மரம்' தங்கசாமி நினைவு நாள்: 2.37 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டதாக ஈஷா மையம் தகவல்". Puthiyathalaimurai. பார்க்கப்பட்ட நாள் 2022-09-11.