மரம் (தரவுக் கட்டமைப்பு)

கணினியியலில் மரம் என்பது பரந்து பயன்படுத்தப்படும் ஒரு படிநிலைத் தரவுக் கட்டமைப்பு (hierarchical data structure) ஆகும். இது ஒரு மரத்தின் அமைப்பை இணைக்கப்பட்ட கணுக்களினால் (nodes) ஒப்புருவாக்கம் செய்கிறது.

வரையறை

தொகு

ஒரு மரத்தின் தொடக்கம் வேர் அல்லது மூலம் (root) ஆகும். வேரில் இருந்து அதன் பிள்ளைக் கணுக்கள் (child nodes) அல்லது கிளைகள் இணைக்கப்பட்டு இருக்கும். அப் பிள்ளைக் கணுக்கள் அவற்றின் பிள்ளைக் கணுக்களைக் கொண்டிருக்கலாம். இவ்வாறு சுழல் (recursively) முறையில் மரம் வரையறை செய்யப்படுகிறது.

பிள்ளைகள் இல்லாத கணுக்களை முனைகள் (edges) அல்லது இலைகள் (leaf) என்பர். ஒரு கணுவிற்கு நேரடியாக முன்னிருக்கும் கணுவை பெற்றவர் என்பர். ஒரு கணுவுக்கு ஒரே ஒரு பெற்றவர் மட்டுமே இருக்க முடியும். இரண்டு கணுக்களுக்கு ஒரே பெற்றவர் இருந்தால் அந்த இரு கணுக்களும் சகோதரர்கள் எனப்படும்.

பயன்கள்

தொகு
  • படிநிலைத் தரவுகளை கையாள
  • வேகமான தேடலுக்கு
  • திசைவி படிமுறைத் தீர்வுகளுக்கு
  • expression tree

கலைச்சொற்கள்

தொகு
  • node - கணு
  • link - இணைப்பு, தொடர்பு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மரம்_(தரவுக்_கட்டமைப்பு)&oldid=3223982" இலிருந்து மீள்விக்கப்பட்டது