மராத்து கடற்கரை

இந்தியாவின் கேரள மாநிலத்திலுள்ள ஓர் இடம்

மராத்து கடற்கரை (Marad Beach) என்பது இந்தியாவின் கேரள மாநிலம் கோழிக்கோடு நகரத்தில் கல்லாய் அருகே உள்ள ஒரு சிறிய மீன்பிடி கிராமமாகும். கல்லாய் இரயில் நிலையத்திற்கு பின்புறம் மராத்து கடற்கரை அமைந்துள்ளது.

மராத்து கடற்கரை
Marad Beach, Kozhikode
முச்சந்தி பள்ளிவாசல், குட்டிச்சிரா
முச்சந்தி பள்ளிவாசல், குட்டிச்சிரா
ஆள்கூறுகள்: 11°12′27″N 75°47′13″E / 11.20745°N 75.78706°E / 11.20745; 75.78706
நாடுஇந்தியா
மாநிலம்கேரளம்

மராத்து சாலை கல்லாய் நகரில் இருந்து தொடங்குகிறது. சாக்கும் கடவு கிராமம் மற்றும் பையனக்கல் கிராமம் வழியாக இச்சாலை செல்கிறது. மராத்து மற்றும் கய்யாடித்தோடு கிராமங்கள் ஒன்றையொன்று ஒட்டியவையாகும்.

வரலாறு

தொகு

2003 ஆம் ஆண்டில், மதம் சார்ந்த ஒரு சம்பவத்தில் எட்டு இந்துக்களும் ஒரு முசுலீமும் இங்கு கொல்லப்பட்டனர்.[1] 2009 ஆம் ஆண்டில் சிறப்பு நீதிமன்றம் 62 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தது.[2]

பொருளாதாரம்

தொகு

இங்கு மீன்பிடித்தல் முக்கிய பொருளாதார மேம்பாட்டு நடவடிக்கையாகும்.

அடையாளங்கள்

தொகு
  • தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பன்னியங்கரையில் பன்னியங்கரை சாலை மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்த மேம்பாலம் கட்டி முடிந்ததும், மராத்து கடற்கரை பயன்பெறத் தொடங்கும்.
  • கோதீசுவரம் கோவில்

இவற்றையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மராத்து_கடற்கரை&oldid=3815004" இலிருந்து மீள்விக்கப்பட்டது