மரியம் கலீஃப்
மரியம் கலீஃப் (Mariyam Khalif), மரியம் என்றும் அழைக்கப்படும் இவர், பாகிஸ்தான் குழந்தை நட்சத்திரம் ஆவார். அவர் ஏ.ஆர்.வொய் டிஜிட்டலில் ஒளிபரப்பப்பட்ட பார்ச்சாயன் என்ற தொலைக்காட்சி நாடகத்தில் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார். மரியம் கலீஃப் , ஏப்ரல்11, 2007 இல் பிறந்தார்.[1] ஏழு வயதிலேயே அவருக்கு புகழ் கிடைத்தது. மேலும் பல பாகிஸ்தான் நாடகங்களில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. பெரும்பாலான தயாரிப்புகள் மற்றும் பிராண்டுகளுக்காகவும் ஓரிரு தொலைக்காட்சி விளம்பரங்களிலும் பணியாற்றினார். தற்போது அவர் மிகவும் பிரபலமான ஜியோ டிவி நாடகங்களில் ஒன்றான பஷர் மோமினில் பரீசா வாகவும்,[2] மற்றும் ஏ.ஆர்.வொய் டிஜிட்டலில் மற்றொரு பிரபலமான நாடக தொடரான கோய் நஹி அப்னாவில், ஷிசாவாகவும் தோன்றுகிறார். அவரது மிகவும் பிரபலமான கதாபாத்திரம் தியார்-இ-தில் தொடரில்,இளம் மாயாவாக நடித்துள்ளார். பின்னர் அக் கதாபாத்திரத்தில் நடிகை மாயா அலி நடித்துள்ளார் .[3]
தொழில்தொகு
மரியம் கலீஃப் தனது 7 வயதில் புகழ் பெற்றார். மேலும் பல பாக்கிஸ்தானிய நாடகங்களில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. பெரும்பாலான தயாரிப்புகள் மற்றும் பிராண்டுகளுக்காக அவர் தொலைக்காட்சி விளம்பரங்களில் பணியாற்றினார். பார்ச்சாயன் நாடகத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.[4] அவர் ஜியோ டிவி நாடகமான பஷர் மோமின்,[5] ஏ.ஆர்.வொய் டிஜிட்டலில் கோய் நஹி அப்னா என்ற மற்றொரு நாடகத் தொடரிலும் நடித்துள்ளார்.
பஷர் மோமினில் பங்குதொகு
பொறாமை, அன்பு, வெறுப்பு, காதல் மற்றும் திடீர் திருப்பங்கள் ஆகியவற்றின் வெளிப்படையான வகைகளின் காரணமாக இந்திய தொலைக்காட்சித் திரையைத் தாக்கிய முதல் பாகிஸ்தான் நாடகம் பஷர் மோமின் ஆகும்.[6][7][8] .[9] அதில் யாசிர் மஜார் மற்றும் சாஹிரா மஹீன் ரிஸ்வி ஆகியோரின் ஒரே குழந்தையாக இருக்கும் பரிஸே வேடத்தில் மரியம் கலீப் நடிக்கிறார். அவர் முதலில் பஷர் மோமினின் இரண்டாவது எபிசோடில் தோன்றினார். மற்றும் இந்த நாடகத்தில்,அவரது நடிப்பு குறைபாடற்றதாக உள்ளது.[5]
கோய் நஹி அப்னாவில் பங்குதொகு
கோய் நஹி அப்னா தொடர், உண்மையில் ஆரம்பத்தில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் ஒரு ஜோடியின் கதையாகும். பின்னர் அன்றாட வாழ்க்கையின் சில அழுத்தங்களால், அவர்களது குடும்பம் சந்தேகத்தால் அழிக்கப்படுகிறது. ஹம்ஸா ( ஃபஹத் முஸ்தபா ) மற்றும் அல்வீரா ( சர்வத் கிலானி ) ஆகியோரின் ஒரே மகள் ஷிசா வேடத்தில் மரியம் கலீப் நடிக்கிறார்.[10]
மேரி பேட்டி தொடரில் பங்குதொகு
மேரி பேட்டி சமீபத்தில் ஏ.ஆர்.வொய் டிஜிட்டலில் ஒளிபரப்பப்பட்டது. இந்த நாடகம் உண்மையில் தாய் மற்றும் மகளின் உறவை அடிப்படையாகக் கொண்டது. மரியம் கலீஃப் ஒரு குழந்தையாக இருந்தபோது ஆரம்ப அத்தியாயங்களில் ஈராஜ் வேடத்தில் நடித்தார். பின்னர் பார்வையாளர்களை நாடகத்தில் 7 ஆண்டுகள் முன்னால் அழைத்துச் சென்றபோது, ஈராஜின் கதாபாத்திரத்தில் பாகிஸ்தான் நாடகங்களின் மற்றொரு திறமையான நடிகை அரிஜ் பாத்திமா நடித்தார். மரியம் கலீஃப் குழந்தை நட்சத்திரமாக இருந்திருப்பது மிகப்பெரியது என்று சொல்வது தவறல்ல.[11]
தொலைக்காட்சி விளம்பரங்கள்தொகு
- கியூ-மொபைல் ஜி -200
மரியம் கலீஃப் சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி விளம்பரத்தில் நடித்துள்ளார். இது, கியூ-மொபைல் ஜி -200 அலைபேசிக்காக தயாரிக்கப்பட்டது. இதில், சிறப்பு குழந்தை நட்சத்திரமான மரியம் கலீஃப் வயதுவந்த வேடங்களில் நடிப்பது ஒரு அழகான தோற்றத்தை அளித்தது. மேலும் இந்த தொலைக்காட்சி விளம்பரத்தில், அவர் குறைபாடற்ற நடிப்பை நிகழ்த்தினார் என்று சொல்வது தவறாகாது எனப்படுகிறது.[12]
குறிப்புகள்தொகு
- ↑ "Cute and Gorgeous kid Pakistani Celebrities’ Receiving Fame". Kristen Stewart.
- ↑ "Bashar Momin (2014) Full Cast & Crew".
- ↑ "Koi Nahi Apna – Episode 7". Fatima Awan.
- ↑ "Mariyam Khalif | biography, dramas, family pics".
- ↑ 5.0 5.1 "Names have power – Bashar Momin Episode 2". Sania. மூல முகவரியிலிருந்து 2 April 2014 அன்று பரணிடப்பட்டது.
- ↑ "Bashar Momin, 1st Pakistani drama to on-air on Indian channel". Nida Tahseen.
- ↑ "Bashar Momin is 1st Pakistani drama to air on Indian channel".
- ↑ "Bashar Momin will hit Indian screen".
- ↑ "Bashar Momin - power unleashed". Sania Akram. மூல முகவரியிலிருந்து 2 March 2014 அன்று பரணிடப்பட்டது.
- ↑ "Koi Nahi Apna - Drama Plot".
- ↑ "End of Play". ARY Digital.
- ↑ "Qmobile G200 TVC 201 Mariyam Khalif". Myipedia.