மரியாதை நடை

உறுப்பு தானத்திற்கு முன்னர் ஒரு நோயாளியை நினைவுகூரும் ஒரு சடங்கு அல்லது நிகழ்வு மரியாதை நடை (Honor walk). தானம் செய்யப்பட்ட உறுப்பினை தானம் பெறும் முன் நோயாளி அறுவைச் சிகிச்சை அறைக்குக் கொண்டு செல்வதற்கு முன் இந்நிகழ்வு பொதுவாக நடைபெறுகிறது.

செயல்முறை

தொகு

நோயாளியினை அறுவைச் சிகிச்சை அறைக்குக் கொண்டு செல்லப்படுவதால், அறையின் வழியில் மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் நோயாளியின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் வரிசையாக அணிவகுத்து நிற்பார்கள்.[1] நோயாளியின் உறுப்புகளை தானம் செய்வதற்கான முடிவிற்குப் பாராட்டும் விதமாகவும் அவருக்கு மரியாதை செலுத்தவும் இந்த நிகழ்வு வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் உறுப்புக் கொடையாளி மூத்தவர் எனின் காவலர் மரியாதையும் உள்ளடக்கியுள்ளது.[2]

ஊடகம்

தொகு

பிப்ரவரி 2020இல், விசாரணை மையம் அறிக்கையின் போட்காஸ்ட் வெளியானது. இதனால் மரியாதை நடையின் மதிப்பு உயர்ந்தது. இது ஹானர் வாக் என்ற தலைப்பில் ஒரு அத்தியாயத்தில் உறுப்பு நன்கொடை செயலின் தேவை குறித்து விவாதிக்கப்பட்டது.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. "Rituals of Honor in Hospital Hallways". April 2, 2019 – via NYTimes.com.
  2. "Marine veteran who died after battle with brain cancer celebrated with Honor Walk in Dallas". Task & Purpose. February 7, 2020. Archived from the original on பிப்ரவரி 13, 2020. பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 24, 2021. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  3. "The Honor Walk".
"https://ta.wikipedia.org/w/index.php?title=மரியாதை_நடை&oldid=3784616" இலிருந்து மீள்விக்கப்பட்டது