மரியாவின் மாசற்ற இதயம்

மரியாவின் மாசற்ற இதயம் என்பது கன்னி மரியாவின் தூய இயல்பையும் அன்பையும் சுட்டிக்காட்டும் கருத்துரு ஆகும். மூவொரு இறைவனின் திட்டத்திலும், மனிதகுல மீட்பிலும் மரியாவின் ஆவல் மற்றும் பங்கை தியானிக்க உதவும் ஒரு பக்தி முயற்சியாக இது விளங்குகிறது. இயேசுவின் திரு இதயம் விழாவைத் தொடர்ந்து வரும் சனிக்கிழமை மரியாவின் மாசற்ற இதயத்துக்கு விழா கொண்டாடப்படுகிறது.

மரியாவின் மாசற்ற இதயம்
மாசற்ற இதயத்துடன் கன்னி மரியா
ஏற்கும் சபை/சமயங்கள்கத்தோலிக்க திருச்சபை, ஆங்கிலிக்க ஒன்றியம், லூதரனியம்
திருவிழாஇயேசுவின் திரு இதயம் விழாவைத் தொடர்ந்து வரும் சனிக்கிழமை
சித்தரிக்கப்படும் வகைபற்றியெரியும் தீயுடன் கூடிய மலர்கள் சூழ்ந்த இதயம்