மரியா அடசோவசுகா
மரியா கொசுடியாண்டினிவா அடசோவசுகா (உக்ரைனியன்: Марія Костянтинівна Адасовська), மரியா சான்கோவெட்சுகா (உக்ரைனியன்: Марія Заньковецька; 4 ஆகத்து 1854 - 4 அக்டோபர் 1934) என்று பிரபலமாக அழைக்கப்படுபவர், ஓர் உக்ரேனிய நாடக நடிகை ஆவார். இவர் 1922 ஆம் ஆண்டில் உக்ரைனின் மக்கள் கலைஞர் விருதை பெற்ற முதல் கலைஞராக ஆனார்.
மரியா அடசோவசுகா மரியா சான்கோவெட்சுகா | |
---|---|
பிறப்பு | மரியா அடசோவசுகா August 4, 1854 சான்கிவ், நிசின் கவுண்டி, செர்னிகிவ் ஆளுநராகம் |
இறப்பு | அக்டோபர் 4, 1934 கீவ், உக்ரானிய சோவியத் குடியரசு | (அகவை 80)
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 1876-1934 |
வாழ்க்கை வரலாறு
தொகுமரியா 19854 ஆம் ஆண்டில் கோசுடியன்டின் அடாசோவசுகி மற்றும் மரியா நெபெடோவா தம்பத்திக்கு மகளாக செர்னிகிவ் ஆளுநராகம் நிசின் மாவட்டத்தில் உள்ள சான்கிவ் நகரில் பிறந்தார்.[1] இவருடன் பிறந்த பல உடன்பிறப்புகள் இருந்தனர். இவர் செர்னிகிவ் நகர பெண் உடற்பயிற்சிக் கூட பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார்.[2]
1876 ஆம் ஆண்டில், மரியா முதன்முதலில் நிசுகின் திரையரங்கில் மேடையில் தோன்றினார்.[3] 27 அக்டோபர் 1882 அன்று மார்கோ கிரோபினிட்சுகியின் நிர்வாகத்தின் கீழ் யெலிசாவெட்கிராட் நகர திரையரங்கில் மரியா நடிக்க தொடங்கினார். இவர் கோட்லியரேவசுகி எழுதிய நடால்கா போல்டாவகா என்ற நாடகத்தில் நடால்கா எனும் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார். இதன் பின்னர் மார்கோ கிரோபிவனெட்சுகி, மைக்கைலோ சுடாரிட்சுகி, மைக்கோலா சடோவசுகி மற்றும் பனாசு சக்சான்சுகி போன்ற மிகவும் பிரபலமான உக்ரேனிய இயக்குநர்களின் நாடக குழுக்களில் மரியா பங்கேற்று நடித்தார்.
இவர் நாடகங்களில் நடிக்கும் பொது மரியா சான்கோவெட்சுகா என்ற மேடைப் பெயரை பயன்படுத்தினார். இந்த புனை பெயரானது இவர் பிறந்த கிராமத்தின் பெயரிலிருந்து பெறப்பட்டது. மரியா நாடகங்களில் முப்பதிற்கும் அதிகமான வெவ்வேறு கதாபாத்திரங்களை ஏற்று நடித்தார். மேலும் இவர் சில நாடகங்களில் உக்ரேனிய நாட்டுப்புற பாடல்களை பாடினார்.
மரியா நிசின் நகரில் ஓர் நிரந்தரமான நாடக அரங்கைத் திறப்பதற்கு பெரும் முயற்சி மேற்கொண்டார். 1918 ஆம் ஆண்டில், இவரின் வழிகாட்டுதலின் பேரில் ஓர் நாடக குழு அமைக்கப்பட்டது. இதில் போரிசு ரோமான்ட்சுகி, ஆண்ட்ரி ரோட்மிரோவ் போன்ற பல முன்னணி நடிகர்களாக கலந்துகொண்டு நடித்தனர். நடால்கா போல்டாவகா, ஹெட்மேன் டோரோசேன்கோ, ஆசா தி சிப்சி போன்ற பல பிரசித்தி பெற்ற நாடகங்கள் அமைத்து நடிக்கப்பட்டன. இவரது மேடை தகுதிகளை அங்கீகரித்து, சூன் 1918 இல் உக்ரைன் குடியரசின் தலைவர் பாவலோ சுகோரோபாட்கி முன்மொழிந்த மரியாவுக்கு வாழ்நாள் ஓய்வூதியம் அளிப்பது குறித்த தீர்மானத்தை அமைச்சர்கள் சபை ஏற்றுக்கொண்டது. 1922 ஆம் ஆண்டில் உக்ரைன் முழுவதும் இவரின் நடிப்பு வாழ்க்கையின் 40வது ஆண்டு விழா வெற்றிகரமாக கொண்டாடப்பட்டது. அதே ஆண்டில் உக்ரைன் குடியரசின் மக்கள் கலைஞர் என்ற உயர் பட்டத்தை பெற்ற முதல் நபரானார்.[3] மரியா அக்டோபர் 4,1934 அன்று காலமானார். இவர் கீவ் நகரில் உள்ள பைக்கோவ் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார்.[4]
அஞ்சலி
தொகுஆகத்து 4,2014 அன்று, கூகிள் மரியாவின் 160 வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் ஒரு புது வரைபடத்தை (டூடில்) பதிவிட்டது.[5][6]
மேற்கோள்கள்
தொகு- ↑ "1854 – actress Maria Zankovetska was born". Ukrainian Institute of National Remembrance. பார்க்கப்பட்ட நாள் 3 January 2024.
- ↑ Shevelyeva, Maryana (4 August 2023). "Maria Zankovetska - the immortal star of the Ukrainian theater". Ukrainian Interest. பார்க்கப்பட்ட நாள் 3 January 2024.
- ↑ 3.0 3.1 "Maria Zankovetska is the queen of the Ukrainian theater and beyond". Vogue. 4 August 2023. பார்க்கப்பட்ட நாள் 3 January 2024.
- ↑ "Maria Zankovetska". Resource History. பார்க்கப்பட்ட நாள் 3 January 2024.
- ↑ "Maria Zankovetska's 160th Birthday". Google. பார்க்கப்பட்ட நாள் 9 August 2023.
- ↑ "4 August: Remembering Maria Zankovetska on Birthday". Observer Voice. 4 August 2023. பார்க்கப்பட்ட நாள் 9 August 2023.