மரியா குயிடேரியா

மரியா குயெடேரியா (Maria Quitéria) (பிறப்பு: 1792 சூலை 27 - இறப்பு: 1853 ஆகத்து 21) இவர் ஒரு பிரேசிலிய படை வீரரும் மற்றும் தேசிய கதாநாயகியுமாவார். இவர் 1822–23ல் பிரேசிலிய சுதந்திரப் போரில் ஒரு ஆணாக உடையணிந்து போரிட்டார். இவர் கேடட் மற்றும் லெப்டினன்ட் பதவிக்கு உயர்த்தப்பட்டு பேரரசரால் கௌரவிக்கப்பட்டார். இவர் "பிரேசிலின் ஜோன் ஆஃப் ஆர்க்" என்றும் அழைக்கப்படுகிறார். [1] மேலும் இவர் ஒரு வகையான தேசிய புகழ்பெற்ற நபராக மாறிவிட்டார். குயிடேரியா பிரேசிலில் இராணுவப் பிரிவில் பணியாற்றிய முதல் பெண்ணாவார். இவர், மரியா ஃபெலிபா டி ஒலிவேரா (இறந்தார் 1873) மற்றும் சகோதரி ஜோனா ஆஞ்சலிகா (1761-1822) ஆகிய மூவரும் போர்த்துகீசியர்களுக்கு எதிரான சுதந்திரப் போரில் மூன்று பாகையன் பெண்கள் எதிர்ப்பு போராளிகள் என்று அறியப்படுகிறார்கள். [2]

மரியா க்விடேரியா டி ஜீசஸ் மெடிரோஸ்
Domenico Failutti - Maria Quitéria.jpg
மரியா க்விடேரியா, 1920 இல் டொமினிகோ ஃபைலுட்டி வரைந்த ஓவியம்.
பிறப்பு27 July 1792 (1792-07-27)
பெராடி சாந்தானா, பாகையா, காலனித்துவ பிரேசில்
இறப்பு21 August 1853 (1853-08-22) (அகவை 61)
சவ்வாதோர், பாகையா, பிரேசில் பேரரசு

தனது தந்தையின் விருப்பத்திற்கு எதிராக, திருமணமாகாத மரியா குயிடேரியா 1822 அக்டோபரில் ஒரு ஆண் வேடமிட்டு பிரேசிலிய இராணுவத்தில் சேர்ந்தார். ஜூன் 1823 வரை, இவர் வாழ்ந்த பாகையாவில் போர்த்துகீசியர்களுக்கு எதிராக பல போர்களில் சண்டையிட்டார். இவரது மாறுவேடத்தை இவரது தந்தை கண்டுபிடித்ததால் இவரை விட்டு வெளியேறினார். ஆனால் போரில் இவரது திறமை காரணமாக, இவர் தொடர்ந்து போராட அனுமதிக்கப்பட்டார். 1823 சூலையில் இவர் கேடட்டாக பதவி உயர்வு பெற்றார். பின்னர் ஆகத்து மாதம் லெப்டினெண்டாக இருந்தார். அங்கு இவர் பேரரசரால் கௌரவிக்கப்பட்டார். [3]

தனிப்பட்ட வாழ்க்கைதொகு

மரியா குயிடேரியா டி இயேசு 1792 சூன் 27, அன்று, பாகையாவின் சாவோ ஜோஸ் தாஸ் இட்டாபொரோகாஸின் (இப்போது ஃபைரா டி சந்தனாவில் அமைந்துள்ளது) திருச்சபையில், லிக்குரிஸீரோவில் பிறந்தார். இவர் ஒரு விவசாயியான கோனலோ ஆல்வ்ஸ் டி அல்மேடா மற்றும் அவரது மனைவி குயிடேரியா மரியா டி ஜீசஸ் ஆகியோருக்கு மூத்த மகளாகப் பிறந்தார். மரியா முறையான கல்வியைப் பெறவில்லை என்றாலும், விவசாயத்திற்குத் தேவையான திறன்களை, அதாவது சவாரி, வேட்டை, மற்றும் துப்பாக்கிகளைப் பயன்படுத்துதல் போன்றவற்றைப் பயிற்சி பெற்றிருந்தார். இந்த திறன்கள் இவருக்கு இராணுவத்திலும் உதவி செய்தது.

போர் முடிந்தவுடன், குயிடேரியா கேப்ரியல் பெரேரா பிரிட்டோ என்பவரை மணந்தார். (இவரது முன்னாள் காதலராக இருந்தார்) இவர்களுக்கு லூயிசா என்ற ஒரு மகள் இருந்தாள். பின்னர் தனது கணவனை இழந்த ஒரு விதவை குயிடேரியா 1853இல் சவ்வாதோர் அருகே தெளிவற்ற மற்றும் வறுமையில் இறந்தார். இவரது உடல் புனித அன்னேவின் ஆசீர்வதிக்கப்பட்ட சாக்ரமென்ட் தேவாலயத்தின் கல்லறையில் வைக்கப்பட்டன . [4] [5] பல ஆண்டுகளுக்குப் பிறகு இவருடைய ஆளுமை புத்துயிர் பெற்றது.

மரபுதொகு

 
பாகையாவில் மரியா குயிடேரியாவின் சிலை

இவரது மரணத்திற்குப் பிறகு, மரியா குயிடேரியா தேசிய அளவில் பல வழிகளில் நினைவுகூரப்பட்டார். 1953ஆம் ஆண்டில், இவர் இறந்து நூறு ஆண்டுகளுக்குப் பிறகு, மரியா குயிடேரியாவின் தோற்றத்தை தாங்கிய இராணுவ வெண்கலப் பதக்கம் வழங்கப்பட்டது. இது "மரியா குயிட்டேரியாவின் பதக்கம்" என்று அழைக்கப்படுகிறது. மேலும் இராணுவ முயற்சிகளுக்கு மதிப்புமிக்க பங்களிப்புகளுக்காக பொதுமக்கள் மற்றும் இராணுவ வீரர்கள் இருவருக்கும் வழங்கப்பட்டது. 1996ஆம் ஆண்டு அதிபரின் ஆணைப்படி, மரியா குயிடேரியா பிரேசிலிய இராணுவத்தின் துணைப் படை அதிகாரிகளின் படைகளின் புரவலராக அறிவிக்கப்பட்டார். [3]

1920ஆம் ஆண்டில் டொமினிகோ ஃபைலுட்டி என்ற இத்தாலிய ஓவியரின் படைப்பு மரியா குயிடேரியாவின் மிகச்சிறந்த ஓவியமாகும். இதில் இவர் தனியாக நின்றுகொண்டு ஒரு துப்பாக்கியைப் பிடித்து, பிரேசிலிய லெப்டினெண்டின் சீருடையை அணிந்துள்ளார். சாவோ பாலோ பல்கலைக்கழகத்தில் உள்ள மியூசியு பாலிஸ்டாவில் இந்த படைப்பைக் காணலாம். [6]

குறிப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மரியா_குயிடேரியா&oldid=2936308" இருந்து மீள்விக்கப்பட்டது