மரியா வெரோனிகா ரீனா
மரியா வெரோனிகா ரீனா (Maria Verónica Reina) (பிறப்பு:1960 - இறப்பு: 2017 அக்டோபர் 27) இவர் அர்ஜென்டினாவின் கல்வி உளவியலாளரும் மற்றும் சமூக ஆர்வலரும் ஆவார். இவர் ஊனமுற்றோர் உரிமைகளுக்காக சர்வதேச அளவில் பிரச்சாரம் செய்தார். சர்வதேச ஊனமுற்றோர் மற்றும் மேம்பாட்டு கூட்டமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்திய இவர் , மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் பேச்சுவார்த்தைகளில் முன்னணி பங்களிப்பாளராக இருந்தார். [1] [2]
ஆரம்ப கால வாழ்க்கை
தொகு1960களின் முற்பகுதியில் அர்ஜென்டினாவில் பிறந்த மரியா வெரோனிகா ரெய்னா தனது 17 ஆவது வயதில் பள்ளி இறுதி ஆண்டு படிக்கும்போது ஒரு கார் விபத்தில் முடக்கப்பட்டார். மருத்துவமனையில் சில காலம் இருந்த பிறகே, இவரால் தனது பள்ளிப்படிப்பை முடிக்க முடிந்தது. இவர் தான் ஒரு ஆசிரியராவார் என்று நம்பினார். ஆனால், அர்ஜென்டினாவில் ஊனமுற்றவர்களுக்கு கற்பிக்க அங்கீகாரம் இல்லாததால் அத்தகைய கல்விப் படிப்பில் நுழைய மறுக்கப்பட்டது. [3] கல்வி ஒருங்கிணைப்பிற்கான சிறப்பு கல்வியில் "யுனிவர்சிடாட் கேடலிகா டி சாண்டா ஃபே" என்றக் கல்லூரியில் (சாண்டா ஃபே கத்தோலிக்க பல்கலைக்கழகம்) பட்டம் பெற்ற இவர் கல்வி உளவியலைத் தேர்ந்தெடுத்ததன் மூலம் இந்த சிரமங்களை சமாளித்தார். எசுப்பானியாவின் தேசிய தொலைதூர கல்வி பல்கலைக்கழகத்தில் திறந்த மற்றும் தொலைதூர கற்றல் மற்றும் கற்பித்தல் ஆகியவற்றில் முதுகலைப் பட்டம் பெற்றார். [1]
தொழில்
தொகுஅர்ஜென்டினாவின் ரொசாரியோவில் உள்ள பல்கலைக்கழக நிறுவனம் சான் மார்ட்டின், அர்ஜென்டினா ஊனமுற்றோர் அமைப்பு, சில்சா; சர்வதேச மறுவாழ்வு மையம், சிகாகோ (1997) , [4] சர்வதேச ஊனமுற்றோர் ஆலோசனை நிறுவனம்; சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனம்; சர்வதேச ஊனமுற்றோர் ஆலோசனை நிறுவனம்; மற்றும் சர்வதேச மறுவாழ்வு மையம் உட்பட பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவத்தை ரெய்னா உருவாக்கினார்.[5][6]
பணி
தொகுஇவர் 2006 முதல் வாசிங்டன் டி.சி.யில் உள்ள சிராகஸ் பல்கலைக்கழகத்தின் பர்டன் பிளாட் நிறுவனத்தில் சர்வதேச திட்டங்களின் இயக்குநராக பணியாற்றினார். 2008ஆம் ஆண்டில், பர்டன் பிளாட் நிறுவனம் மற்றும் உலக வங்கி இரண்டின் ஆதரவோடு, ஊனமுற்றோர் மற்றும் மேம்பாட்டுக்கான உலகளாவிய கூட்டாண்மைக்கான முதல் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டார். ஊனமுற்றவர்களை மேம்பாட்டு முகவர் மூலம் கொள்கைகள் மற்றும் நடைமுறைகளில் சேர்ப்பதை ஊக்குவிக்க இந்த கூட்டு அமைக்கப்பட்டது. [5] ஊனமுற்றோர் மாநாட்டிற்கான ஐக்கிய நாடுகளின் தற்காலிகக் குழுவில் இவர் குறிப்பாக தீவிரமாக இருந்தார். [6]
ஐ.நா. மாநாட்டின் பேச்சுவார்த்தைகளில், உலகளாவிய, மாற்றுத்திறனாளி அமைப்புகளை உள்ளடக்கிய, அணுகக்கூடிய மற்றும் நிலையான உலகில் குறைபாடுகள் உள்ளவர்களுக்கு உலகளாவிய மனித உரிமைகளுக்கான தனது உறுதிப்பாட்டில் இவர் ஈடுபட்டார். [2] சர்வதேச ஊனமுற்றோர் காகஸின் ஒருங்கிணைப்பாளராக தனது பாத்திரத்தில் பேச்சுவார்த்தைகளின் போது குறைபாடுகள் உள்ளவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். இதற்கான தகவல்தொடர்புகளை திறம்பட நிர்வகித்தார். மாறுபட்ட ஆர்வங்களுடன் பங்குதாரர்களிடையே ஒருமித்த கருத்தை அடைந்தார். இவர் கூட்டங்கள் மற்றும் மாநாடுகளுக்கு தலைமை தாங்கினார். லத்தீன் அமெரிக்கர்களுக்கான ஸ்பானிஷ் மொழியில் மொழிபெயர்ப்பு மற்றும் விநியோக ஆவணங்களை ஒருங்கிணைத்தார். [1]
இவர் இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பு, சர்வதேச ஊனமுற்றோர் கூட்டணியின் கீழ் மாற்றுத்திறனாளிகளின் பங்குதாரர் குழுவின் செயல்திறனை மேம்படுத்த இவர் உதவினார். புவெனஸ் ஐரிஸில் நடந்த ஐக்கிய நாடுகளின் ஆலோசனைக் கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் தொடர்பான மாநாட்டை அமல்படுத்துவதில் ஊனமுற்ற சமூகத்தின் பங்கை வலுப்படுத்த முயன்றார். [2]
இறப்பு
தொகுமரியா வெரோனிகா ரீனா தனது சொந்த ஊரான ரொசாரியோவில் 2017 அக்டோபர் 27 அன்று தனது 54 வயதில் காலமானார். [2]
குறிப்புகள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "Dear Colleague and former director of BBI international programs, Maria Veronica Reina, Passes Away in Argentina". Burton Blatt Institute. 31 October 2017. பார்க்கப்பட்ட நாள் 10 March 2020.
- ↑ 2.0 2.1 2.2 2.3 "Passing of Ms Maria Veronica Reina". United Nations: Department of Economic and Social Affairs, Disability. 31 October 2017. பார்க்கப்பட்ட நாள் 10 March 2020.
- ↑ "Ich bin anders, aber gleich (3): Maria Veronica Reina, Argentinien/USA" (in German). Rolling Planet. 25 January 2012. Archived from the original on 14 மார்ச் 2020. பார்க்கப்பட்ட நாள் 10 March 2020.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)CS1 maint: unrecognized language (link) - ↑ "Center for International Rehabilitation". GuideStar. பார்க்கப்பட்ட நாள் 10 March 2020.
- ↑ 5.0 5.1 "[Syracuse University News] Global disability and poverty efforts get key boost from agreement between SU's Burton Blatt Institute and World Bank". Syracuse University. 29 January 2008. பார்க்கப்பட்ட நாள் 10 March 2020.
- ↑ 6.0 6.1 "World Bank, Syracuse U. Join Forces Against Poverty Among Disabled People". We Can Do. 2 February 2008. பார்க்கப்பட்ட நாள் 10 March 2020.