மரியோ அமுய்

மரியோ ஆந்திரேசு அமுய் வாகன்குட் (Mario Andrés Hamuy Wackenhut) (பிறப்பு 1960) ஒரு சிலி வானியலாளர். இவர் சிலி பல்கலைக்கழகத்திலும் செறோ கலான் ஆய்வகத்திலும் வானியல் பேராசிரியராக உள்ளார். அனைத்து வகை மீவிண்மீன் வெடிப்புகளையும் குறிப்பாக வகை IA மற்றும் வகை II மீவிண்மீன் வெடிப்புகளை அண்டத் தொலைவின் அளவீடுகளாகப் பயன்படுத்தியதற்காக அவர் நன்கு அறியப்பட்டவர்.

மரியோ ஆந்திரேசு அமுய்
மரியோ ஆந்திரேசு அமுய்
மரியோ ஆந்திரேசு அமுய்
பிறப்பு 1960
சிலி
தேசியம்சிலியர்
Alma materசிலி பல்கலைக்கழகம், அரிசோனா பல்கலைக்கழகம்
துறை ஆலோசகர்பில் பின்ட்டோ
அறியப்பட்டதுஅணடத் தொலைவு ஏணி#மீவிண்மீன் வெடிப்பு

தொழில் வாழ்க்கை

தொகு

இவர்மரியோ அமுய் பெர்ரினுடைய மகன் ஆவார் , அமுய் பெர் இலெவந்தைன் கால்வழியைச் சேர்ந்த பொருளியலாலரும் அரசியல்வாதியும் ஆவார்.[1] , மரியோ அமுய்சாந்தியாகோ, ஜெனரல் ஜோசு மிகுவேல் கரேரா தேசிய நிறுவனத்தில் படித்தார். அமூய் , ஜார்ஜ் மெல்னிக்குடன் இணைந்து சிலி பல்கலைக்கழகத்தில் வானியல், இயற்பியல் மாணவராக இருந்தார். 1987 பிப்ரவரியில் அவர் செறோ தோலோலோ அமெரிக்க ஆய்வகத்திற்கு வந்தார். இவர் வந்த சில நாட்களுக்குள் வகை II மீவிண்மீன் வெடிப்பு எசு. என் 1987 ஏ பெரிய மகெல்லானிக் ஒண்முகிலில் வெடித்தபோது , இந்த முதன்மை மீவிண்மீன் வெடிப்பைக்கண்காணிக்க சி. டி. ஐ. ஓ. (CTIO)வில் ஒரு பெரிய பரப்புரையைத் தொடங்கினார்.[2]

1989 ஆம் ஆண்டில் ஜோசு மாசா, மார்க் எம். பிலிப்சு, நிக்கோலசு சுந்த்செப் ஆகியோருடன் இணைந்து அவர் கலான் / தோலோ மீவிண்மீன் வெடிப்புகணக்கெடுப்பைத் தொடங்கினார் , இது வகை Ia மீவிண்மீன் வெடிப்புபின் செந்தர மெழுகுவர்த்தி ஒளிர்மை குறித்த முன்னோடிப் பணிக்கு வழிவகுத்தது.[3][4] இந்தப் பணி அபிள் மாறிலி H0, வீழ்ச்சி அளவுரு q0′ ஆகியவற்றின் துல்லியமான அளவீடுகளுக்கு வழிவகுத்தது , பிந்தையது படவி பொருண்மை / ஆற்றலில் ஆட்சி செலுத்தும் இருண்ட ஆற்றல் அல்லது அண்டவியல் மாறிலி இருப்பதைக் காட்டியது.[5][6][7]

அரிசோனா பல்கலைக்கழகத்தில் ப ட்டதாரி பள்ளியில் , சுட்டீவர்ட் ஆய்வகத்தில் பேராசிரியர் பில் பிண்டோவுடன் பணிபுரிந்த இவர் , அகட்டுக் குலைவு மீவிண்மீன் வெடிப்பு பற்றிய ஆய்வுக்கு தனது கவனத்தை மாற்றினார் , குறிப்பாக வகை II மீவிண்மீன் வெடிப்பைப் பயன்படுத்தி வடிவியல் தொலைவுகளை அளவிட, பேட் - வெசுலிங் முறையைப் பயன்படுத்தினார். இம்முறை விரிவுறும் ஒளிமண்டல முறை (EPM) என்றும் அழைக்கப்படுகிறது.[8] பிண்டோவுடன் சேர்ந்து அவர் இரண்டாம் வகை மீவிண்மீன் வெடிப்புநிகழ்வுகளுக்கான தொலைவுகளை அளவிடுவதற்கான ஒரு பகுதி ஆய்வு முறையை கண்டுபிடித்தார் , இது செந்தர மெழுகுவர்த்தி முறை என்று அழைக்கப்படுகிறது , இது ஈ. பி. எம். க்கு மேல் தொலைவுத் துல்லியங்களை மேம்படுத்தியது.[9]

தகைமைகளும் விருதுகளும்

தொகு

எசுப்பானிய வானியலாளர் இரபேல் பெராண்டோ என்பவரால் பிளா தெ ஆர்கைன்சு நோக்கீட்டகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 109097அமுய் எனும் சிறுகோள் இவரது நினைவாக 2001 இல் பெயரிடப்பட்டது. [10] [11]அலுவல்முறைப் பெயரீடும் மேற்கோளும் சிறுகோள் மையத்தால் 18 பிப்ரவரி 2011 அன்று வெளியிடப்பட்டது (சிறுகோள் மையச் சுற்றறிக்கை. M.P.C. 73984).[11] 2015 ஆம் ஆண்டில் இவர் துல்லியமான அறிவியலுக்கான தேசியப் பரிசை வென்றார். அவர் சிலி அரசாங்கத்தின் அறிவியல் ஆராய்ச்சி முகமையான கோனிக்கியூத்தின்(CONICYT) தலைவராக இருந்தார. 2016 ஆம் ஆண்டு துவாசு(TWAS) பரிசைப் பெற்றார்.[12][13]

மேற்கோள்கள்

தொகு
  1. Caviedes, Cesar (26 June 2019). The Politics of Chile: A Sociogeographical Assessment. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781000304671.
  2. Hamuy et al. 1988, Astronomical Journal, 95, 63
  3. Phillips, M. M. 1993, Astrophysical Journal Letters",413, 105
  4. Hamuy, M. et al. 1993, Astronomical Journal, 106, 2392
  5. Suntzeff, N.B. et al. 1999, Astronomical Journal, 119, 1175
  6. Freedman, W. et al. 2001, Astrophysical Journal, 553, 47
  7. Riess, A. et al. 1998, Astronomical Journal, 119, 1009; Schmidt, B. P., et al. 1998, Astrophysical Journal, 507, 46; see also Perlmutter, S. et al. 1999, Astrophysical Journal, 517, 565
  8. Hamuy, M., et al. 2001, Astrophysical Journal, 558, 615
  9. Hamuy, M., & Pinto, P. A. 2002, Astrophysical Journal Letters, 566, L63
  10. "109097 Hamuy (2001 QM33)". Minor Planet Center. பார்க்கப்பட்ட நாள் 8 August 2019.
  11. 11.0 11.1 "MPC/MPO/MPS Archive". Minor Planet Center. பார்க்கப்பட்ட நாள் 8 August 2019.
  12. "Presidente del Concejo". CONICYT. பார்க்கப்பட்ட நாள் 2016-11-06.
  13. "Prizes and Awards". The World Academy of Sciences. 2016.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மரியோ_அமுய்&oldid=3774824" இலிருந்து மீள்விக்கப்பட்டது