மரீனா பே சாண்ட்ஸ்

சிங்கப்பூரில் அமைந்துள்ள ஒரு கேளிக்கை மையம்

மரினா பே சாண்ட்ஸ் (Marina Bay Sands) எனும் ஒருங்கிணைந்த கேளிக்கை மையம் சிங்கப்பூரின் மரீனா பே பகுதியில் அமைந்துள்ளது. அமெரிக்காவின் லாஸ் வேகஸ் குழுமத்தின் ஓர் அங்கம் இது. 8 பில்லியன் அமெரிக்க டாலர் செலவில் கட்டி முடிக்கப்பட்டது[1][2]. இதில் கேசினோ எனும் சூதாட்ட மையம், தங்கும் விடுதி, இரண்டு திரையரங்குகள், அருங்காட்சியகம், கடைத்தொகுதிகள் மற்றும் கூட்டங்கள், விழாக்கள் நடத்துவதற்கான அரங்குகள் உள்ளன. தங்கும் விடுதியின் உச்சியில் நீச்சல் குளமும் அமைந்துள்ளது.

மரீனா பே சாண்ட்ஸ்
Location சிங்கப்பூர்
Address 10 பே ப்ரண்ட் அவென்யூ, சிங்கப்பூர் 018956
Opening date 15 பெப்ருவரி 2011 (grand opening)
23 June 2010 (official opening)
27 April 2010 (preview opening)
No. of rooms 2,561
Signature attractions சாண்ட்ஸ் ஸ்கை பார்க்
The Shoppes at Marina Bay Sands
The Sands Expo and Convention Centre
Bay Floral
Marina Bay Club
Marina Bay Sands Art Path
ArtScience Museum
Wonder Full
Notable restaurants CUT
DB Bistro Moderne
Savoy Singapore
Imperial Treasure Fine Chinese Cuisine
Beijing No. 1
Waku Ghin
Pizzeria
Sky on 57
Hide Yamamoto
Casino type Land-based
Owner Las Vegas Sands Corp
Website Marina Bay Sands

விடுதியில் 2561 அறைகளும், 1,300,000 சதுர அடியில் கூட்டங்கள் மற்றும் விழாக்கள் நடத்துவதற்கான அரங்கும், 800,000 சதுர அடிப்பரப்பில் கடைத் தொகுதியும், 500 மேஜைகள் மற்றும் 1,600 விளையாட்டு இயந்திரங்கள் கஸினோவிலும் உள்ளது. 340 மீட்டர் நீளமுள்ள 'ஸ்கைபார்க்' ஹோட்டலின் 57 வது தளத்தில்[3] உள்ளது. இதில் 150 மீட்டரில் நீச்சல் குளம் அமைந்துள்ளது. மொத்தம் 3,900 மக்கள் இந்த ஸ்கைபார்க்கில் ஒரே நேரத்தில் இருக்க முடியும்.ஹோட்டல் மூன்று கோபுரங்களாக உள்ளது இதில் வடக்கு கோபுரத்தில் வெளியே 67 மீட்டர் நீளத்திற்கு ஸ்கைபார்க் நீட்டிக் கொண்டிருக்கும்.

2009 -ல் திறப்பதாக திட்டமிடப்பட்டிருந்த இம்மையம் பொருளாதார நெருக்கடி, மனிதவளப் பற்றாக்குறை, பொருட்கள் பற்றாக்குறை ஆகியவற்றால் 2010 ஜூன் 23 மற்றும் 24 தேதிகளில் திறக்கப்பட்டது.

புகைப்படம்

தொகு
 
57 வது மாடியின் உச்சியில் அமைந்துள்ள முடிவிலா நீச்சல் குளம் (Infinity Pool)

மேற்கோள்கள்

தொகு
  1. "Las Vegas Sands says Singapore casino opening delayed". Asiaone.com. 8 July 2009. Archived from the original on 2018-08-28. பார்க்கப்பட்ட நாள் 2012-08-10.
  2. "Marina Bay Sands set to open 27 April". Sbr.com.sg. Archived from the original on 2012-07-31. பார்க்கப்பட்ட நாள் 2012-08-10.
  3. http://www.marinabaysands.com/sands-skypark/infinity-pool.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=மரீனா_பே_சாண்ட்ஸ்&oldid=4031832" இலிருந்து மீள்விக்கப்பட்டது