மருங்கூர்ப் பாகை சாத்தன் பூதனார்

மருங்கூர்ப் பாகை சாத்தன் பூதனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது அகநானூறு 327.

பெயர் விளக்கம்

தொகு

பூதன் என்பது இவர் பெயர். 'ஆர்' சிற்று விகுதி. மருங்கூர் இவரது ஊர். இவரது தந்தை பெயர் பாகைசாத்தன்.

மருங்கூரில் வாழ்ந்த புலவர்கள்

தொகு

மருங்கூர் கிழார் பெருங்கண்ணனார், மருங்கூர்ப் பட்டினத்துச் சேந்தன் குமரனார் ஆகிய புலவர்களும் இவ்வூரைச் செர்ந்தவர்கள்.

பாடல் சொல்லும் செய்தி

தொகு

பொருள் தேடச் செல்லவிருக்கும் தலைவன் தன் நெஞ்சைக் கேட்கிறான்.

அழுவம்

தொகு
 
மரல் என்னும் கானல்நீர்

சேற்றோடு கலங்கி நிற்கும் நீர் 'கொழிநீர்' எனப்படும். வெயிலின் ஆவி தொலைவிலிருந்து பார்க்கும்போது கொழிநீர் போலத் தோன்றும். இதனை மரல் என்பர். அழுவத்தில் மரல்தான் குடிநீர்.

அங்குள்ள மரங்களில் பாம்புத்தோல் போலச் செதில் உரியும். அவற்றின் கிளைகள் உலர்ந்துபோயிருக்கும். அடிமரத்தில் புற்று இருக்கும். அவற்றின் கிளைகளில் பாணம் தின்னும் மணிக்கண் காக்கைகள் இருக்கும். செல்லவேண்டிய வழி எது என அறிய முடியாதபடி பல கவலை வழிகள் பிரிந்து செல்லும்.

அழுவம் சென்றபின் நினைத்தலும் செய்தியோ

தொகு

இன்பமும் இடும்பையும், புணர்வும் பிரிவும், பகலும் இரவும போல வேறு வேறாக மாறு எதிர்ந்து வரும் என்பதை, நெஞ்சே! நீ உணர்ந்திருக்கிறாயா அல்லது அழுவம் சென்றபின் நினைப்பாயா - என்று தலைவன் தனக்குள் கேட்டுக்கொள்கிறான்.