மருங்கூர் கிழார் பெருங்கண்ணனார்

மருங்கூர் கிழார் பெருங்கண்ணனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது அகநானூறு 80.

புலவர் பெயரின் விளக்கம்

தொகு

பொருங்கண்ணன் என்பது இவரது இயற்பெயர். மருங்கூர் மக்கள் இவரைத் தமக்கு உரிமையாக்கிக் கொண்டிருந்தனர். இவரைத் தலைமையாகக் கொண்டு வழிமொழிந்து இவர் சொற்படி வாழ்ந்துவந்தனர்.

மருங்கூர்ப் புலவர்கள்

தொகு

மருங்கூர்ப் பட்டினத்துச் சேந்தன் குமரனார், மருங்கூர்ப் பாகை சாத்தன் பூதனார் ஆகிய புலவர்களும் மருங்கூரில் வாழ்ந்தவர்கள்.

பாடல் சொல்லும் செய்தி

தொகு

தலைவிக்காக இரவில் வந்த தலைமகனைத் தோழி பகலில் வருமாறு சொல்லுகிறாள்.

இரவின் இன்னல்

தொகு
 
'கோட்டுமீன்' எனப்பட்ட சுறா

தலைவன் ஊருக்கும், தலைவி இருக்கும் இடத்துக்கும் இடையில் நீர் தேங்கி நிற்கும் கழி. அந்தக் கழியில் கொம்புள்ள சுறாமீனும், முதலைகளும் மேயும். அந்தக் கழியை நீந்தித் தாண்டி அவன் வருகிறான். தலைவி தன்னைக் கொடுத்துவிட்டுப் பின்விளைவை எண்ணி அஞ்சுகிறாள். அவள் சார்பாகத் தோழி பகலில் வருமாறு அறிவுறுத்துகிறாள்.

பகலில் வரவேண்டிய பொழுது

தொகு

தந்தை கடலில் பிடித்துவந்த மீனைக் காயவைத்து அதனைக் கவர வரும் பறவைகளை ஓட்டிக்கொண்டு பகலில் உன்னை நினைத்துக்கொண்டிருப்போம். அப்போது வருக. பூத்திருக்கும் அடும்புக்கொடி அறுந்தாலும் பரவாயில்லை. தேரில் வருக, என்கிறாள்.