மருத்துவக் கல்லூரி அனுமதி முறைகேடு வழக்கு

மருத்துவக் கல்லூரி அனுமதி முறைகேடு வழக்கு, மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு முறைகேடாக அனுமதி அளித்த வழக்கில், இந்திய அரசின் முன்னாள் அமைச்சர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்ய தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.[1] அன்புமணி உள்ளிட்ட சிலர் மீது தொடர்ந்த வழக்கில் இரண்டாம் ஆண்டுக்கு அனுமதி அளித்தது சரிதான் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனாலும் இந்த வழக்கு இன்னும் முடித்து வைக்கப்படவில்லை.

பின்னணி

தொகு

2004 - 2009ஆம் ஆண்டு காலத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைமையிலான கூட்டணி அரசில் அன்புமணி ராமதாஸ், இந்திய அரசின் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த போது, உத்தர பிரதேச மாநிலம், ரேபரேலியில் உள்ள ரோஹில்கண்ட் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு முறைகேடாக அனுமதி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கு இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டின் பேரில், கடந்த 2009 ஆம் ஆண்டு லக்னோ நீதிமன்றத்தில் இருந்து தில்லி சிபிஐ நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. மேலும் மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் உள்ள இண்டெக்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சட்ட விரோதமாக அனுமதி வழங்கியதாகவும் சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இந்த மருத்துவக் கல்லூரிக்கு தேவையான ஆசிரியர்கள், ஆய்வக வசதிகள் இல்லாத நிலையில், இந்திய மருத்துவ கவுன்சில் மற்றும் உச்சநீதிமன்ற விசாரணைக் குழுவின் பரிந்துரைகளை மீறி, இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு இந்திய நடுவண் அரசின் முன்னாள் அமைச்சர் அன்புமணி அனுமதி வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

தொகு