மருத்துவத்துறையின் வரலாறு
பிறப்பு, இறப்பு, நோய் ஆகியன மனித வாழ்வோடு ஒன்றிணைந்த கூறுகள். இவை தொடர்பாக எல்லா சமூகங்களும் மருத்துவ நோக்கிலான விளக்கங்கள் கொண்டிந்தன. அந்த விளக்கங்கள் பட்டறிவு, சமய நம்பிக்கைகள் அடிப்படையில் அமைந்திருந்தன. தற்காலத்தில் அறிவியல் மருத்துவத்துக்கு உறுதியான ஒரு அடிப்படையைத் தந்தது. மருத்துவத்துறையின் வரலாறு பல்வேறு சமூகங்களின் மருத்துவங்களின் வரலாற்றையும், தற்கால அறிவியல் சார்ந்த மருத்துவத்துறையின் வரலாற்றையும் பற்றியதாகும்.
அறிவியல் மருத்துவத்தின் எழுச்சி
தொகுதற்கால மருத்துவத்தின் எழுச்சியும் ஆதிக்கமும் 1800 களில் அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய போன்ற மேற்கு நாடுகளில் தொடங்கியது. அக்காலத்தில் பொது மருத்துவம் என்று ஒன்று இல்லாமல் பல மருத்துவ பிரிவுகள் இருந்தன. அந்தக் காலப்பகுதியில் Germ theory of disease, Antibiotic, மரபியல் என்று உறுதியான கோட்பாடுகள் அறியப்பட்டிருக்கவில்லை. எப்படி நோயைக் கண்டுபிடிப்பது, எப்படி குணப்படுத்துவது தொடர்பாக தரப்படுத்தப்பட்ட முறைகள் இருககவில்லை. மருத்துத்துறை அவ்வளவு சமூக அந்தஸ்தும் பெற்றுருக்கவில்லை. எப்படி இந்தியாவில் அறுவைச் சிகிச்சை நிபுணர்கள் கீழ் சாதியாக கருதப்பட்டார்களோ, அதற்கு சற்று மேம்பட்ட நிலை மேற்குநாடுகளில் இருந்தது. குறிப்பாக பலமான துறையாளர்களின் கைகளில் மருத்துவம் அன்று இருக்கவில்லை. 1800 பிற்பகுதியில் இந்த நிலை மாறத்தொடங்கியது.
அன்று பொது மருத்துமாக Allopathic மருத்துவம் மருபியது. அந்த மருத்துவர்கள் ஒரு ஒன்றியம் அமைத்து தங்களது நலனுக்காக நடவடிக்கைகளை மேற்கொண்டனர். Homoepoahts, ecelctics, Chiropractic, Osteopathy, pharmacy, midwifry போன்ற அன்றிருந்த பிற பிரிவினர்களை சிறுமைப்படுத்தினர் அல்லது தமது கட்டுப்பாட்டுகள் கொண்டுவந்தார்கள்.
1900 களில் மருத்துவ ஒன்றியங்களின் செயற்பாட்டால் மருத்துவக் கல்வி தரப்படுத்தப்படு, மருத்துவம் உரிமம் பெறவேண்டிய பணி என்று சட்டமாகிற்று. தனியார் கல்லூரிகள் தொடங்கப்பட்டு, மருத்துவம் வேகமாக ஒரு வணிகமாக தன்னை வளர்த்துக்கொண்டது. இதன் பின்னரே மருத்துவம் அறிவியல் முறைப்படி கல்விக்கும் பணிக்கும் முக்கியத்துவம் தந்தது. அறிவியல் நோக்கிலான ஆய்வுகள் நோய் பற்றி, நோய்களை கண்டறியும் முறைபற்றி, குணப்படுத்தும் முறை பற்றி பல முன்னேற்றங்களை எட்டியது. மருத்துவத்திம் அறிவியமயமாக்கப்பட்ட பின் பல உட்பிரிவுகள் தோன்றின. எடுத்துக்காட்டாக physiotherpay, occupational therpay, x-tray technology, Nursing, Pharamsy ஆகியவையாம். மேலும், இப்படி வளர்ந்த மருத்துவம் சித்த மருத்துவம், சீன மருத்துவம் போன்றவற்றை பிற அறிவியல் எழுச்சிக்கு முற்பட்ட மருத்துவ முறைகளை பின் தள்ளியது, அல்லது அவற்றை மாற்று மருத்துவங்கள் என்று சிறுமைப்படுத்தியது.
1900 களின் தொடக்கத்தில் மருத்துவக் கல்வியும் மருத்துவத்துறையும் தனியார் வணிகங்களிடமே இருநத்து. 1950 களின் பின்பு இந்த நிலை கனடாவிலும் ஐரோப்பாவின் பல நாடுகளில் மாறத்தொடங்கியது. தனியாரிடம் இருந்த மருத்துவத்துறை பெரும் தொகை மக்களின் மருத்துவத் தேவையை பூர்த்திசெய்யவில்லை. இலாபம் ஈட்டும் நோக்கில் நோய்களை வரும் முன் காப்பதை விட, வந்த பின் குணப்படுத்தும் பண்பைப் பெற்றிருந்தது. இதனால் பெரும்பான்மை மக்கள் அரசு மருத்துவ சேவைகளை வழங்க உதவவேண்டும் என்று வேண்டினர். இதன் நீட்சியாக 1960 களில் கனடா, மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் மருத்துவக் கல்வியையும் சேவையும் அரசு முதன்மையகா வழங்க தொடங்கியது. அரசு கட்டுப்பாட்டுக்குள் மருத்துவம் வந்த பின்னர் மருத்துவர்கள் அரச சேவையார்களாக மாறினர்.
முக்கிய கண்டுபிடிப்புகள்
தொகு- 1284 - மூக்குக் கண்ணாடி
- 1674 - உயிரணுக்கொள்கை
- 1796 - தடுப்பு மருந்தேற்றம்
- 1800 - உணர்வகற்றல்
- 1816 - துடிப்புமானி
- 1858 - படிவளர்ச்சி
- 1870 - நோய்க் கிருமிக் கோட்பாடு
- 1895 - ஊடுகதிர் அலைகள்
- 1896 - Cardiac surgery
- 1905 - கருவிழி மாற்று சிகிச்சை
- 1928 - நுண்ணுயிர் எதிர்ப்பி - நோய்க்கிருமி கட்டுப்படுத்தி: பெனிசிலின்
- 1953 - டி.என்.எ
- 1957 - செயற்கை இதயமுடுக்கி
- 1958 - மீயொலி நோட்டம்
- 1967 - இதய மாற்று அறுவை சிகிச்சை
- 1971 - வரியோட்டவழிக் கணித்த குறுக்குவெட்டு வரைவி
- 1973 - காந்த அதிர்வு அலை வரைவு
- 2000 - மனித மரபகராதித் திட்டம்
இவற்றையும் பாக்க
தொகுவெளி இணைப்புகள்
தொகு- Gary Jeffrey. (2007). Medical Breakthroughs. Rosen Classroom. [1]