மருத்துவ தொற்றுநோயியல்

தொற்றுநோய்கள் தொடர்புடைய பிரச்சினைகளில் கவனம் செலுத்தும் ஒரு துணைப்பிரிவு

மருத்துவ தொற்றுநோயியல் (Clinical epidemiology) என்பது தொற்றுநோயியலின் ஓரு துணை பிரிவு ஆகும். குறிப்பாக தொற்றுநோய்கள் தொடர்புடைய பிரச்சினைகளில் இப்பிரிவு கவனம் செலுத்துகிறது. 1938ஆம் ஆண்டு அமெரிக்க மருத்துவ ஆய்வுக்கான சங்கத்தில் உரையாற்றியபோது இயீன் பால் அவர்களால் முதன்முதலில் மருத்துவ தொற்றுநோயியல் என்ற சொற்பிரயோகம் அறிமுகப்படுத்தப்பட்டது.[1] [2] சில நேரங்களில் இது "மருத்துவத்தின் அடிப்படை அறிவியல்" என்றும் குறிப்பிடப்படுகிறது.[3]

வரையறை

தொகு

1938 ஆம் ஆண்டில் "மருத்துவ தொற்றுநோயியல்" என்ற வார்த்தையை உருவாக்கியபோது, அவர் இதை "தொற்றுநோய் நிபுணர்களால் மக்கள்தொகையில் நோயைப் படிக்கப் பயன்படுத்தப்படும் அளவு கோட்பாடுகளுக்கும் ,தனிப்பட்ட நபர்களின் நோயில் முடிவெடுக்கும் மருத்துவத்தின் தினசரி நடவடிக்கைகளுக்கும் இடையிலான திருமணம்" என்று வரையறுத்தார். [4] இசுடீபன்சன் & பாபிக்கரின் (2000) கருத்தின்படி "மருத்துவ தொற்றுநோயியல் என்பது நோய் பரவல் மற்றும் நிர்ணயம் பற்றிய ஆய்வு மற்றும் கட்டுப்பாடு என வரையறுக்கப்படுகிறது." [5] வால்டர் ஓ. இசுபிட்சர் என்பவர் வரையறைகளில் எவையெவை தெளிவாக வரையறுக்கப்படவில்லை என்பவற்றை எடுத்துரைத்துள்ளார். மருத்துவ தொற்றுநோயியல் என்ற சொல்லாடலில் விமர்சனங்கள் இருந்தபோதிலும், தொற்றுநோயியல் பற்றிய ஒரு குறிப்பிட்ட துணைப்பிரிவை வரையறுக்க இது ஒரு பயனுள்ள வழியாகும் என்று அவர் உணர்ந்தார். [6] இதற்கு நேர்மாறாக, இயான் எம். லாசுட் இந்த வார்த்தை ஒரு சொல்முரண் என்றும், பல்வேறு மருத்துவப் பள்ளிகளில் இது பிரபலமடைந்து வருவது ஒரு தீவிர பிரச்சனை என்றும் கூறுகிறார்.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. John R. Paul (1938-09-01). "PRESIDENT'S ADDRESS CLINICAL EPIDEMIOLOGY" (in en). The Journal of Clinical Investigation 17 (5): 539–541. doi:10.1172/JCI100978. பன்னாட்டுத் தர தொடர் எண்:0021-9738. பப்மெட்:16694597. 
  2. Sackett, David L. (December 2002). "Clinical epidemiology". Journal of Clinical Epidemiology 55 (12): 1161–1166. doi:10.1016/S0895-4356(02)00521-8. https://archive.org/details/sim_journal-of-clinical-epidemiology_2002-12_55_12/page/1161. 
  3. Dieckmann, K.-P.; Pichlmeier, U. (2004-04-01). "Clinical epidemiology of testicular germ cell tumors" (in en). World Journal of Urology 22 (1): 2–14. doi:10.1007/s00345-004-0398-8. பன்னாட்டுத் தர தொடர் எண்:1433-8726. பப்மெட்:15034740. 
  4. 4.0 4.1 John M. Last (1988). "What Is "Clinical Epidemiology?"". Journal of Public Health Policy 9 (2): 159–163. doi:10.2307/3343001. பன்னாட்டுத் தர தொடர் எண்:0197-5897. 
  5. Stephenson, J M; Babiker, A (1 August 2000). "Overview of study design in clinical epidemiology". Sexually Transmitted Infections 76 (4): 244–247. doi:10.1136/sti.76.4.244. பப்மெட்:11026877. 
  6. Walter O. Spitzer (1986-01-01). "Clinical epidemiology". Journal of Chronic Diseases 39 (6): 411–415. doi:10.1016/0021-9681(86)90107-4. பன்னாட்டுத் தர தொடர் எண்:0021-9681. 

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=மருத்துவ_தொற்றுநோயியல்&oldid=3520898" இலிருந்து மீள்விக்கப்பட்டது