மர்தானி ஜுமர்

நாட்டுப்புற நடன வடிவம்

மர்தானி ஜுமர் ( Mardani Jhumar ) ( மர்தானா ஜுமர் (Mardana Jhumar ) என்பது இந்திய மாநிலங்களான சார்க்கண்டு, சத்தீசுகர் மற்றும் ஒடிசாவில் ஆண்களால் ஆடப்படும் நாக்புரி நாட்டுப்புற நடனம் ஆகும் .[1][2][3] இது அறுவடைக்குப் பிறகான திருவிழாவில் நிகழ்த்தப்படுகிறது.[4][5] ஆண்கள் சலங்கை அணிந்து, வாள், கேடயம் ஏந்தி, ஒருவரையொருவர் கைகளைப் பிடித்துக்கொண்டு வட்டமாக நடனமாடுவார்கள். மந்தர், நகரா, தக் மற்றும் செனாய் அல்லது பன்சி இந்த நடனத்தில் பயன்படுத்தப்படும் இசைக்கருவிகள் ஆகும். நடன இயக்கம் ஆண்பால் ஆற்றலை பிரதிபலிக்கிறது.[6] சில நேரங்களில் பெண் நடனக் கலைஞர்கள் அவர்களுடன் வருகிறார்கள், அவர்கள் நாக்னி என்று அழைக்கப்படுகிறார்கள்.[7]

சான்றுகள்

தொகு
  1. Professor at Folklore Institute and African Studies and Adjunct Professor School of Music Ruth M Stone (1998). The Garland Encyclopedia of World Music: South Asia : the Indian subcontinent. Taylor & Francis. pp. 371–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8240-4946-1.
  2. Stephen Blum; Philip Vilas Bohlman; Daniel M. Neuman (1993). Ethnomusicology and Modern Music History. University of Illinois Press. pp. 224–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-252-06343-5.
  3. "Mardani Jhumar". Jharkhandculture. பார்க்கப்பட்ட நாள் 27 September 2022.
  4. Manish Ranjan (2022). Jharkhand General Knowledge 2022. Prabhat Prakashan. p. 4.10. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9354883002.
  5. "Nagpuri harvest songs and instrumental music – Maharashtra". 10 September 2022. பார்க்கப்பட்ட நாள் 24 September 2022.
  6. "Mardana Jhumar Dance in India". india9.com. Archived from the original on 2012-05-20. பார்க்கப்பட்ட நாள் 20 October 2018.
  7. Babiracki, Carol M. (2008), "Between Life History and Performance: Sundari Devi and the Art of Allusion", Ethnomusicology, 52:1: 1–5, எண்ணிம ஆவணச் சுட்டி:10.2307/20174564, JSTOR 20174564, S2CID 193412396
"https://ta.wikipedia.org/w/index.php?title=மர்தானி_ஜுமர்&oldid=3664912" இலிருந்து மீள்விக்கப்பட்டது